500 ஆண்டுகால தபால் சேவையை வெளிநாட்டு கோடீஸ்வரருக்கு விற்க பிரித்தானிய அரசு அனுமதி
பிரித்தானியாவின் 500 ஆண்டுகள் பழமையான தபால்சேவையின் உரிமை முதல் முறையாக வெளிநாட்டு கோடீஸ்வரருக்கு மாற்றப்படுகிறது.
Royal Mail-ன் தாய் நிறுவனமான இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிப்யூஷன் சர்வீசஸ் (IDS) 3.6 பில்லியன் பவுண்டுக்கு செக் பில்லியனர் Daniel Kretinsky-யின் EP குழுமத்திற்கு விற்க பிரித்தானிய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
EP குழுமம் மற்றும் IDS மே மாதம் இந்த உடன்பாட்டிற்கு ஒப்புக் கொண்டன, ஆனால் பிரித்தானியாவில் அஞ்சல் சேவையின் முக்கியத்துவம் காரணமாக தேசிய பாதுகாப்பு சட்டங்களின் கீழ் உத்தியோகபூர்வ ஒப்புதலுக்காக காத்திருந்தனர்.
இந்த சேவையின் தலைமையகம் தொடர்ந்து இங்கிலாந்தில் இருக்கும், மேலும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பிரித்தானிய அரசாங்கம் சேவையில் Golden Share என்று அழைக்கப்படும் உரிமையைத் தக்க வைத்துக் கொள்ளும்.
அதாவது ராயல் மெயிலின் உரிமை, தலைமையக இருப்பிடம் மற்றும் வரி வதிவிடம் ஆகியவற்றில் ஏதேனும் முக்கிய மாற்றங்களுக்கு பிரித்தானிய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இந்த ஒப்பந்தம் 2025 ஆரம்பத்தில் நிறைவேறும் என கணிக்கப்பட்டுள்ளது. இது ராயல் மெயிலின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது.
பிரித்தானியாவின் பழமையான நிறுவனங்களில் ஒன்றான ராயல் மெயில், 1500-களில் மன்னர் மற்றும் அரண்மனைக்கான பிரத்தியேக சேவையாக தொடங்கபட்டது. பின்னர் 1600-களில் பொதுத் தபால்சேவையாக மாறியது.
2013-ல் தனியார் மயமாக்கப்பட்ட இதன் பயன்பாடு சமீப ஆண்டுகளில் கடுமையாக குறைந்துள்ளது, இது தற்போதைய உரிம மாற்றத்திற்கு காரணமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
billionaire Daniel Kretinsky's EP Group, UK RoyalMail