பிரித்தானிய ஆயுதப்படை உறுப்பினர் ரகசிய சட்டத்தின் கீழ் கைது!
பிரித்தானியாவின் ஆயுதப்படையில் பணியாற்றும் உறுப்பினர் ஒருவர் மீது அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ஆயுதப்படை உறுப்பினர்
கடந்த 18ஆம் திகதி அன்று, ஆயுதப்படையில் பணியாற்றும் உறுப்பினரான தாமஸ் நியூஸம் (36) என்பவர், Met's Counter Terrorism Commandயின் விசாரணையைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, 20ஆம் திகதி அவரை கைது செய்ய பிடியாணை வழங்கப்பட்டது.
@PA
ரகசிய சட்டத்தின் கீழ் கைது
இந்த நிலையில், அவர் மீது அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் 1989யின் பிரிவு 2 மற்றும் பிரிவு 8க்கு முரணான குற்றங்கள் சுமத்தப்பட்டது என ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@REUTERS/Hannah McKay/File Photo