வெட்கக்கேடான செயல் அது... பிரித்தானியாவின் முடிவு குறித்து கொந்தளித்த இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேலுக்கு சில ஆயுத ஏற்றுமதி உரிமங்களை இடைநிறுத்திய பிரித்தானிய அரசாங்கத்தின் செயல் வெட்கக்கேடானது என அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொந்தளித்துள்ளார்.
வெட்கக்கேடான முடிவு
இஸ்ரேலுடனான 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் 30ஐ அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் லாம்மி திங்களன்று தெரிவித்தார்.
குறித்த ஆயுதங்களை சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களைச் செய்ய இஸ்ரேல் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். காஸாவில் ஹமாஸ் படைகளின் சுரங்கப்பாதையில் இருந்து 6 பிணைக்கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டத அடுத்த நாள் பிரித்தானியாவின் இந்த முடிவு வெளியிடப்பட்டது.
இதற்கு பல இஸ்ரேல் அமைச்சர்கள் உடனடியாக எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையிலேயே பிரித்தானியாவின் முடிவை இஸ்ரேல் பிரதமர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரித்தானிய அரசாங்கத்தின் இந்த வெட்கக்கேடான முடிவு ஹமாஸ் படைகளை தோற்கடிக்கும் இஸ்ரேலின் உறுதியை மாற்றாது என நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 7 அன்று 14 பிரித்தானிய குடிமக்கள் உட்பட 1,200 பேரை கொடூரமாக படுகொலை செய்த ஒரு இனப்படுகொலை பயங்கரவாத அமைப்புக்கு எதிராக தங்களின் நடவடிக்கை தொடரும் என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேலும், 5 பிரித்தானிய குடிமக்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை தற்போதும் ஹமாஸ் படைகள் சிறை வைத்துள்ளதாக குறிப்பிட்ட நெதன்யாகு, இப்படியாக இக்கட்டான சூழலில் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்காமல், பிரித்தானியாவின் இந்த தவறான முடிவு ஹமாஸ் படைகளை கண்டிப்பாக ஊக்கம் கொள்ளச் செய்யும் என்றார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
அத்துடன், பிரித்தானியாவின் ஆயுதங்கலுடன் அல்லது அது இல்லாமலும் இஸ்ரேல் இந்த யுத்தத்தை வெல்வது உறுதி என நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பெற்றுக்கொள்ளும் ஆயுதங்களில் 1 சதவிகிதம் மட்டுமே பிரித்தானியா ஏற்றுமதி செய்கிறது.
இதனால், பிரித்தானியாவின் இந்த முடிவு இஸ்ரேலுக்கு எந்தவகையிலும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தப் போவதில்லை என்றே கூறப்படுகிறது.
அக்டோபர் 7 தாக்குதலை அடுத்து நடந்துவரும் போர் குற்றங்கள் தொடர்பில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தலைவர்கள் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலில், 1,200 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவ்க்கப்பட்டாலும், உண்மையில் 600 பேர்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்றே அரசு சாரா சமூக அமைப்புகள் தெரிவிக்கின்றன.
பதிலுக்கு இஸ்ரேல் முன்னெடுத்துவரும் தாக்குதலில் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 40,700 கடந்துள்ளது என்றே பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |