உக்ரைன் அமைதி பணிக்கு பிரித்தானியா தயார் நிலையில் இல்லை-முன்னாள் ராணுவத் தலைவர் வலியுறுத்தல்
உக்ரைன் அமைதி பாதுகாப்புப் பணிக்கு பிரித்தானிய இராணுவம் தயார் நிலையில் இல்லை என முன்னாள் ராணுவத் தலைவர் கூறியுள்ளார்.
பிரித்தானிய இராணுவம் தற்போது மிகவும் பலவீனமடைந்த நிலையில் உள்ளது, எனவே உக்ரைனில் அமைதி பாதுகாப்புப் பணிக்கு பிரித்தானியா முன்னணி சக்தியாக இருக்க முடியாது என்று முன்னாள் ராணுவத் தலைவர் Lord Dannatt தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், உக்ரைனின் பாதுகாப்பிற்காக பிரித்தானியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால், இதற்கு 40,000 ராணுவ வீரர்கள் தேவைப்படும் என்பதால், இப்படியான பணிக்கு பிரித்தானியாவிற்கு போதுமான ஆள்சக்தி இல்லை என Lord Dannatt BBC-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரித்தானிய பாதுகாப்புக் கொள்கையை முன்னுரிமையாக மாற்ற வேண்டும் என்றும், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அதிக முதலீடு அவசியம் என்றும் Lord Dannatt வலியுறுத்தினார்.
அமைதி பாதுகாப்புப் பணிக்கான சிக்கல்கள்
முன்னாள் NATO தலைவர் Anders Fogh Rasmussen கூறியபடி, அமைதி பாதுகாப்புப் பணிக்கு சுமார் 50,000 - 100,000 வீரர்கள் தேவைப்படும்.
பிரித்தானிய இராணுவத்தில் தற்போதைய நிலவரம் 74,612 வீரர்கள் மட்டுமே உள்ளனர்.
புதிய ஆட்சேர்ப்பு இலக்குகள் தொடர்ந்து தவறி வருகின்றன (2010 முதல் தற்போது வரை).
பிரித்தானிய அரசின் நிலைப்பாடு
பிரித்தானியா, உக்ரைனுக்கு 12.8 பில்லியன் பவுண்டுகள் நிதி உதவி மற்றும் ஆண்டுக்கு 3 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி வழங்கவுள்ளது.
50,000 உக்ரைன் வீரர்கள் இதுவரை பிரித்தானியாவில் பயிற்சி பெற்றுள்ளனர்.
இதனிடையே புதிதாக டிரோன்கள், டாங்கிகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் என 150 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய பாதுகாப்பு உதவியை பிரித்தானியா அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK military, UK Army, Ukraine peace mission