பிரித்தானியாவில் மாயமான இளம்பெண்ணின் உடல் வனப்பகுதியில் கண்டுபிடிப்பு!
பிரித்தானியாவில் ஒரு வாரத்திற்கு மேலாக காணாமல் போன இளம்பெண் காட்டு வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Yorkshire-ஐ சேர்ந்தவர் Chelsea Allen (31). இவர் ராணுவத்தில் சமையல்கலைஞராக இருந்தவர். கடந்த மாதம் Chelsea காணாமல் போன நிலையில் குடும்பத்தார் மற்றும் பொலிசார் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று Helmsley அருகே உள்ள வனப்பகுதியில் Chelsea சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பொலிசார் ஹெலிகாப்டர், ட்ரோன்கள், ஆஃப்-ரோட் பைக்குகளை பயன்படுத்தி Chelsea-வை தேடி வந்த நிலையிலேயே இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது.
North Yorkshire Police
Chelsea தங்கமான மனதுடையவர், நாங்கள் உன்னை மிகவும் நேசிக்கிறோம் என குடும்பத்தார் உருக்கத்துடன் தெரிவித்துள்ளனர். பொலிஸ் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், காவல்துறை குழுவினர் தேடுதலில் வனப்பகுதியில் இருந்து ஒரு உடலை கண்டுபிடித்தனர்.
முறையான அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அந்த உடல் Chelseaவின் உடல் தான் என அதிகாரிகள் நம்புகின்றனர். அவர் இறப்புக்கான சூழ்நிலைகள் தற்போது சந்தேகத்திற்குரியதாக இல்லை, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
MEN MEDIA