பிரபல பிரித்தானிய பல்பொருள் அங்காடிக்கு 640,000 பவுண்டுகள் அபராதம்
பிரபல பிரித்தானிய பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு 640,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
640,000 பவுண்டுகள் அபராதம்
வேல்சிலுள்ள பிரித்தானியாவின் பிரபல பல்பொருள் அங்காடியான Asdaவுக்குத்தான் இந்த 640,000 பவுண்டுகள் அபராதம்.
காலாவதியான 115 உணவுப்பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததற்காக வேல்ஸ் நாட்டின் Cardiff நகரிலுள்ள Leckwith மற்றும் Pentwyn ஆகிய Asda நிறுவன கிளைகளுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வழக்குச் செலவுகளுக்காக 15,115 பவுண்டுகளும் 2,000 பவுண்டுகள் உப கட்டணம் செலுத்தவேண்டும் என்றும் Asda நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் சோதனை நடத்தியபோது, Leckwith கிளையில் காலாவதியான 36 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
Pentwyn கிளையில் ஒருமுறை சோதனையிடும்போது 25 காலாவதியான பொருட்களும், ஒரு மாதத்திற்குப் பின் மீண்டும் ஒருமுறை சோதனை மேற்கொண்டபோது, 48 காலாவதியான பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |