பிரித்தானியாவில் சராசரி வீடுகளின் விலை சரிவு: வட்டி விகிதத்தை உயர்த்தும் இங்கிலாந்து வங்கி
பிரித்தானியாவில் சராசரி வீடுகளின் விலை மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் சரிவை சந்தித்து இருப்பதாக ஹாலிஃபாக்ஸ் தெரிவித்துள்ளது.
வாழ்க்கை செலவு பிரச்சனை
பிரித்தானியாவில் வாழ்க்கை செலவு நெருக்கடியால் பல தரப்பு மக்கள் பல்வேறு போராட்டங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை வட்டி விகிதங்களை 4.25% முதல் 4.5% வரை இங்கிலாந்து வங்கி உயர்த்தும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Getty
அத்துடன் இந்த கோடை காலத்தில் வங்கி வட்டி விகிதம் 5% வரை எட்டலாம் எனவும் எச்சரிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சரியும் வீட்டு விலைகள்
இதற்கிடையில் பிரித்தானியாவில் சராசரி வீடுகளின் விலை கடந்த மார்ச் மாதத்தில் 0.8% உயர்ந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் 0.3% சரிந்துள்ளது.
அதே போல மார்ச் மாதத்தில் வீட்டு விலை வளர்ச்சி ஆண்டு விகிதம் 1.6% இருந்து 0.1%மாக குறைந்துள்ளது.
Bloomberg
அப்படியென்றால், ஏப்ரல் மாதத்தில் சராசரி சொத்து மதிப்பு 286,896 பவுண்டுகள் என Halifax தெரிவித்துள்ளது.