புதிய விமான எஞ்சினை உருவாக்கவுள்ள Rolls-Royce - பிரித்தானிய அரசு 200 மில்லியன் நிதி உதவி
UK Backs Rolls-Royce 200 Mn Dollar Engine Project: Rolls-Royce நிறுவனத்திற்கு பிரித்தானிய அரசு நிதி உதவி வழங்கவுள்ளது.
Rolls-Royce நிறுவனத்திற்கு பிரித்தானிய அரசு 200 மில்லியன் நிதி உதவி
பிரித்தானிய விமான எஞ்சின் தயாரிப்பு நிறுவனமான Rolls-Royce, புதிய குறுகிய தூர விமான எஞ்சின் உருவாக்கத்திற்காக பிரித்தானிய அரசின் நிதி உதவியை பெறவுள்ளது.
Financial Times வெளியிட்ட தகவலின்படி, 200 மில்லியன் பவுண்டு வரை அரசின் உதவி வழங்கப்படலாம். அடுத்த வாரமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிதி, UltraFan 30 எனப்படும் புதிய எஞ்சின் மாதிரியை உருவாக்கவும் சோதனை செய்யவும் பயன்படுத்தப்படும்.
Rolls-Royce நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக குறுகிய தூர விமான சந்தையில் இல்லை. தற்போது, இந்த புதிய எஞ்சின் மூலம் narrowbody விமான சந்தையில் மீண்டும் நுழைய முயற்சிக்கிறது.
Rolls-Royce நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Tufan Erginbilgic, “அரசு இந்த திட்டத்தை ஆதரித்தால், புதிய எஞ்சின் narrowbody விமானங்களில் பயன்படுத்தப்படும். இதனால் பிரித்தானியாவில் 40,000 வேலை வாய்ப்புகள் உருவாகும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஜேர்மனி மற்றும் அமெரிக்க அரசுகளுடனும் Rolls-Royce பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. உலகளாவிய விமான சந்தையில், குறுகிய தூர விமானங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இந்த எஞ்சின் Rolls-Royce-க்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம், பிரித்தானிய விமானத் துறைக்கு முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது. சுற்றுசூழலுக்கு உகந்த, எரிபொருள் திறன் அதிகம் கொண்ட எஞ்சின் உருவாக்கப்பட்டால், விமானப் போக்குவரத்து துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |