கிழக்கு லண்டனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு
பிரித்தானியாவில் கிழக்கு லண்டனில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 வயது சிறுவன் உயிரிழந்து இருப்பதாக பெரு நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
கிழக்கு லண்டனில் தீ விபத்து
கிழக்கு லண்டனின் ஸ்டெர்ன் க்ளோஸ், பார்கிங்கில்(Stern Close, Barking) பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ விபத்தில் ஏற்பட்ட நிலையில் அதில் 11 வயது சிறுவன் உயிரிழந்து இருப்பதாக பெரு நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்தில் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள மூன்று அறைகள் கொண்ட பிளாட் முற்றிலும் அழிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.25 மணி அளவில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் குடியிருப்பில் இருந்த நான்கு பேரும் வெளியேறி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் ஒருவருக்கு மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
விசாரணை
தீ விபத்துக்கான காரணம் குறித்து தனிப்படை மற்றும் மாநகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sky News
இந்த விபத்தில் 11 வயது சிறுவன் உயிரிழந்து இருக்கும் நிலையில், இதுவரை சந்தேகத்திற்கு இடமானதாக எதுவும் தெரியவில்லை என பொலீசார் தெரிவித்துள்ளனர்.