இந்தியா சென்ற லண்டன் பல்கலை பேராசிரியை நாடுகடத்தல்: பின்னணி
லண்டன் பல்கலை பேராசிரியை ஒருவர் இந்தியா சென்ற நிலையில், அவர் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படாமல் நாடுகடத்தப்பட்டார்.
லண்டன் பல்கலை பேராசிரியை நாடுகடத்தல்
இத்தாலி நாட்டவரான ஃப்ரான்செஸ்கா (Francesca Orsini), லண்டன் பல்கலையில் மொழிகள் சார் துறையில் பேராசிரியராக பணியாற்றிவருகிறார்.
திங்கட்கிழமை, ஃப்ரான்செஸ்கா இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.
ஆனால், அவர் இந்தியாவிற்குள் நுழைய இந்திய அதிகாரிகள் அவருக்கு அனுமதியளிக்கவில்லை. உடனடியாக அவர் நாடுகடத்தப்பட்டார்.
காரணம் என்ன?
விடயம் என்னவென்றால், சுற்றுலா விசாவில் இந்தியா செல்லும் ஃப்ரான்செஸ்கா, அங்கு ஆய்வுப்பணிகள் மேற்கொண்டுள்ளார்.
ஃப்ரான்செஸ்கா இதற்கு முன் சுற்றுலா விசாவில் வந்து பணி செய்வது தெரியவந்ததால், மார்ச் மாதம் இந்தியா அவரை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.
சுற்றுலா விசாவில் வந்து பணி செய்வது விதிமீறலாகும். ஆகவேதான், இம்முறை அவர் இந்தியா சென்றதும் அவரை இந்தியாவிற்குள் அனுமதிக்க மறுத்து அவரை நாடுகடத்தியுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், ஃப்ரான்செஸ்கா நாடுகடத்தப்பட்டதை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் விமர்சிக்க, வெளிநாட்டவர் ஒருவரை தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிப்பதும் மறுப்பதும் அந்தந்த நாட்டின் இறையாண்மை சார்ந்த உரிமையாகும் என இந்திய அதிகாரிகள் பதிலளித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |