பிரித்தானியா முழுவதும் புயல் காற்று மற்றும் கனமழை: புதிய அம்பர் எச்சரிக்கை
பிரித்தானியா முழுவதும் புயல் காற்று மற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீவிர வானிலை எச்சரிக்கை
பிரித்தானியாவில் ஞாயிற்றுக்கிழமை கடுமையான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென் மற்றும் மத்திய வேல்ஸ் பகுதிகளில் அதிக கனமழை பெய்யும் என புதிய அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது ஏற்கனவே நாடு முழுவதும் புயல் காற்று மற்றும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கைகளுடன் சேர்ந்துள்ளது.
வட அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பிரித்தானியாவின் மேற்கு கடற்கரை மற்றும் மிட்லாண்ட்ஸ் பகுதிகளில் புயல் காற்றுக்கான மஞ்சள் எச்சரிக்கைகள் ஏற்கனவே அமலில் உள்ளன.
வேல்ஸிற்கான புதிதாக அமல்படுத்தப்பட்ட அம்பர் எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை அமலில் இருக்கும்.
மேற்கு பகுதிகளில் காற்றின் வேகம் ஞாயிற்றுக்கிழமை காலை முழுவதும் அதிகரித்து, மணிக்கு 70 மைல்கள் வரை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் வானிலை ஆய்வாளர் ஜோ ஹுடின், திங்கட்கிழமை தென்கிழக்கில் மழை நீடித்தாலும், இங்கிலாந்து முழுவதும் மேகமூட்டமாகவும், மற்ற பகுதிகளில் நாள் ஒப்பீட்டளவில் சிறப்பாக தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |