லண்டன் அருகே இரண்டு ரயில்கள் மோதி பெரும் விபத்து., ஒருவர் உயிரிழப்பு
பிரித்தானியாவில், லண்டன் அருகே 60 மைல் தொலைவில், பெட்ஃபோர்டு பகுதியில் இரண்டு ரயில்கள் மோதியதில் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 89 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 11 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
விபத்து, உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 5.15 மணியளவில் எல்ஸ்டோவ் அருகே நடந்தது.

கொர்பி-லண்டன் செயின்ட் பான்க்ரஸ் ரயிலும், நாட்டிங்ஹாம்-லண்டன் செயின்ட் பான்க்ரஸ் ரயிலும் மோதியதாக பிரிட்டிஷ் போக்குவரத்து பொலிஸ் தெரிவித்துள்ளது.
அவசர சேவைகள் உடனடியாக 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், 6 ஹெலிகாப்டர்கள், தீயணைப்பு மற்றும் பொலிஸ் படையினரை அனுப்பினர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
ஆம்புலன்ஸ் சேவை வெளியிட்ட அறிக்கையில், ஒருவர் உயிரிழந்ததாகவும், 11 பேர் மிகக் கடுமையான காயம், 22 பேர் தீவிர காயம் மற்றும் 56 பேர் சிறிய காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தால் East Midlands Railway மற்றும் Thameslink சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. லூட்டன்-பெட்ஃபோர்டு இடையிலான பாதைகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. பயணிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து Rail Accident Investigation Branch விசாரணை நடத்தி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |