போரிஸ் ஜான்சன் பக்கம் சாயும் முக்கிய அமைச்சர்: பிரதமர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
44 நாட்களிலேயே பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக லிஸ் டிரஸ் அறிவித்தார்.
முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பக்கம் நிற்க போவதாக அறிவித்த பிரித்தானிய பாதுகாப்பு துறை அமைச்சர்.
பிரித்தானிய பிரதமர் போட்டியில் இருந்து தான் விலகுவதாகவும் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தான் ஆதரவு வழங்க இருப்பதாகவும் பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் டிரஸ், பதவியிலிருந்த 44 நாட்களிலேயே ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பிரதமர் லிஸ் டிரஸ் அரசாங்கத்தின் மோசமான பொருளாதார திட்டங்கள் மூலம் சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, எழுந்த சர்ச்சை மற்றும் எதிர்ப்புகளால் அவர் பதவி விலகும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
BREAKING: UK Defence Minister Ben Wallace rules himself out of leadership contest and says he leans towards Boris Johnson
— The Spectator Index (@spectatorindex) October 21, 2022
இதையடுத்து பிரித்தானியாவின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த வாரத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் எனவும், அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் திங்கட்கிழமை மதியம் 2 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த பிரதமருக்கான போட்டியில் முன்னணியில் ரிஷி சுனக், பென்னி மோர்டான்ட், போரிஸ் ஜான்சன் போன்ற கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய நபர்கள் களமிறங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அந்த வகையில் இந்த போட்டியில் மற்றொரு முக்கிய போட்டியாளராக இருக்கலாம் என கருதப்பட்ட பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
getty image
அந்த தகவலில் பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் தன்னை தலைமைப் போட்டியில் இருந்து விலக்கிக் கொண்டு, முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பக்கம் சாய்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: தீபாவளி பண்டிகையை பொது பள்ளி விடுமுறையாக அறிவித்தது அமெரிக்கா: இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்
இதனால் பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளி அரசியல்வாதியான ரிஷி சுனக்-கிற்கும், போரிஸ் ஜான்சனுக்கும் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.