FIFA 2035 மகளிர் உலகக் கோப்பையை நடத்த பிரித்தானியா விண்ணப்பம்
2035 மகளிர் உலகக் கோப்பையை நடத்துவதற்கான முயற்சியை பிரித்தானியா அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட ஐர்லாந்து இணைந்து, 2035 மகளிர் உலகக் கோப்பையை நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளன.
இது 1966-ல் நடைபெற்ற ஆண்கள் உலகக் கோப்பைக்கு பிறகு, பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் மிகப்பெரிய FIFA போட்டியாகும்.
இந்த விண்ணப்பத்தில் மொத்தம் 22 மைதானங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 16 இங்கிலாந்தில், 3 வேல்ஸில், 2 ஸ்காட்லாந்தில் மற்றும் 1 வட ஐர்லாந்தில் அமைந்துள்ளன.

“All Together” என்ற பார்வையுடன், மகளிர் கால்பந்தை உலகளவில் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
FA, Irish FA, Scottish FA மற்றும் FA of Wales ஆகியவை வெளியிட்ட கூட்டு அறிக்கையில், “இந்த உலகக் கோப்பையை நடத்துவது எங்கள் நான்கு நாடுகளுக்கும் பெருமை. 4.5 மில்லியன் டிக்கெட்டுகள் ரசிகர்களுக்காக வழங்கப்படும். மகளிர் மற்றும் சிறுமிகளின் விளையாட்டை மேலும் வளர்க்கும் வாய்ப்பு இது” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மூன்று முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது: பங்கேற்பு (Participation), முன்னணி (Leadership), மற்றும் வணிக வளர்ச்சி (Commercial Growth).
2035-க்குள் மகளிர் அதிகாரிகளை இரட்டிப்பாக்குதல், உலகளாவிய வழிகாட்டல் மற்றும் கல்வி திட்டங்கள், புதிய ரசிகர்கள் மற்றும் பங்குதாரர்களை ஈர்த்தல் ஆகியவை இதில் அடங்கும்.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “Lionesses அணியின் வெற்றி, நாடு முழுவதும் சிறுமிகளை ஊக்குவித்துள்ளது. இந்த உலகக் கோப்பை, சமூகங்களுக்கும் வணிகங்களுக்கும் பெரும் பலன்களை அளிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, பிரித்தானியாவின் இந்த விண்ணப்பத்திற்கு போட்டியாளர்கள் எவரும் இல்லை. அடுத்த ஆண்டு FIFA காங்கிரஸில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. 2031 முதல் மகளிர் உலகக் கோப்பை 48 அணிகளுடன் நடைபெறவுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK 2035 Women’s World Cup bid, England Scotland Wales Northern Ireland FIFA, FIFA Women’s World Cup 2035 stadiums, UK football associations joint bid, Keir Starmer World Cup statement, UK women’s football growth 2035, FIFA Congress World Cup decision, UK legacy plan women’s sports, UK 2035 World Cup ticket sales, UK largest single-sport event bid