337 மில்லியன் டொலர் குடியிருப்பு விற்பனைக்கு... நாட்டை விட்டு வெளியேறிய பிரித்தானிய கோடீஸ்வரர்
சமீபத்திய வருடங்களாக பிரித்தானிய கோடீஸ்வரர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு குடியேறிவரும் நிலையில், தற்போது இன்னொரு பிரபலமான கோடீஸ்வரரும் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாதகமற்ற வரி மாற்றங்கள்
நோர்வேயில் பிறந்த கப்பல் அதிபரும் பிரித்தானியாவின் ஒன்பதாவது பில்லியனருமான John Fredriksen என்பவரே தற்போது நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
அத்துடன் லண்டனில் உள்ள தனது 300 ஆண்டுகள் பழமையான ஜார்ஜிய மாளிகையை 337 மில்லியன் டொலர்களுக்கு விற்பனைக்கு வைத்துள்ளார்.
சாதகமற்ற வரி மாற்றங்களால் பிரித்தானியா மிக மோசமான கட்டத்திற்குச் சென்றுவிட்டது என்று கூறி, நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை ஃபிரெட்ரிக்சன் பகிரங்கமாக விமர்சித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
13.7 பில்லியன் பவுண்டுகள் சொத்து மதிப்பைக் கொண்ட ஃப்ரெட்ரிக்சன், மிகப்பெரிய எண்ணெய் டேங்கர் கப்பல் வரிசையை வைத்திருக்கிறார், மேலும் மீன் வளர்ப்பு மற்றும் எரிவாயு ஆகியவற்றிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
Seatankers மேலாண்மை
சமீபத்திலேயே அவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடம்பெயர்வதாக அறிவித்தார். வரி மாற்றங்கள் மற்றும் அரசியல் சூழல்களே தமது இந்த இடம்பெயர்வதற்கான காரணங்களாகக் குறிப்பிட்டார்.
ஐக்கிய அமீரகத்தில் இருந்து தனது உலகளாவிய வணிக நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்பார்வையிடும் அதே வேளையில் தனது பெரும்பாலான நேரத்தைச் செலவிட விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், தனது தனியார் கப்பல் வணிகங்களில் ஒன்றான Seatankers மேலாண்மையின் லண்டன் தலைமையகத்தை ஃப்ரெட்ரிக்சன் மூடினார். மட்டுமின்றி, அவரது இரட்டை மகள்களான சிசிலி மற்றும் கேத்ரின் ஃப்ரெட்ரிக்சன், குடும்பத் தொழிலின் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |