பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்., பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
பிரித்தானியாவில் இன்று கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம், நேற்று காணாமல் போன 17 வயது சிறுமியாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் Cheshire பகுதியில் உள்ள Holmes Chapel கிராமத்தில் செவ்வாய்க்கிழமையன்று, Imogen Tothill எனும் 17 வயது சிறுமி காணாமல் போனதாக தகவல் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
காணாமல் போன போது, அச்சிறுமி ஒரு கருப்பு நிற ஹூடி, கருப்பு நிற கால்ச்சட்டை மற்றும் ஒரு கருப்பு நிற rucksack வகை பையை மாட்டி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இமோகனை பொலிஸார் தேடிவந்த நிலையில், இன்று அதிகாலை ரேவன்ஸ்கிராஃப்ட் அருகே உள்ள மரங்கள் நிறைந்த பகுதியில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அந்த உடல் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை, ஆனால் அது காணாமல் போன 17 வயது சிறுமி இமோகன் டோத்தில் என்று நம்பப்படுவதாக செஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறப்பு அதிகாரிகள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து செஷயர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் மைக் கிரைம்ஸ் கூறியதாவது: இரவு முழுவதும் அதிகாரிகள் இமோகனை தேடியும் பலனில்லை. ஹோம்ஸ் சேப்பல் பகுதியில் அல்லது அதைச் சுற்றி உள்ள எவரும் இமோகன் காணாமல் போனதில் இருந்து பார்த்திருக்கலாம் என்று நினைக்கும் எவரையும் எங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அவர் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல் அல்லது அவள் காணாமல் போனதில் இருந்து அவளது சிசிடிவி அல்லது டேஷ்கேம் காட்சிகள் பற்றிய தகவல் இருந்தாலும் பொலிஸை அணுகவும் என்று கூறினார்.
அதேபோல், இமோகன் உயிரோடு இருக்கும் பட்சத்தில் "நீங்கள் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறீர்கள் என்பதை எங்களுக்குத் தெரிவிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு இமோஜனிடம் நேரடியாக வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று அவர் கூறினார்.