பிரித்தானியர்களுக்கு 'அற்புதமான' கிறிஸ்துமஸ் பரிசை அறிவித்த பிரதமர்!
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், கோவிட்-19 தடுப்பூசியை நாட்டிற்கான 'அற்புதமான' கிறிஸ்துமஸ் பரிசாக குடிமக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் போரிஸ் ஜான்சன் வெள்ளிக்கிழமை தனது கிறிஸ்துமஸ் ஈவ் உரையில், நாட்டில் தொற்று எண்னிக்கை அதிகரித்து வருவதால், தடுப்பூசியை தேசத்திற்கான ஒரு "அற்புதமான" பரிசாகக் கருதப்பட வேண்டும் என்று பொதுமக்களை அறிவுறுத்தினார்.
அவர் பேசுகையில், "பரிசுகளை வாங்குவதற்கு இன்னும் சிறிது நேரம் மட்டுமே உள்ளது, உங்கள் குடும்பம் மற்றும் முழு நாட்டிற்கும் ஒரு அற்புதமான விடயம் பரிசாக இருக்கிறது. அது வேறொன்றும் அது உங்களுக்கான தடுப்பூசி தான்.
அது உங்களுக்கான முதல் டோஸாக இருக்கலாம் அல்லது இரண்டாவது டோஸாக இருக்கலாம், அல்லது பூஸ்டர் தடுப்புசியாக கூட இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அந்த தடுப்பூசியை தேசத்தின் கிறிஸ்துமஸ் பரிசாக நீங்கள் பெற்றுக்கொள்ளவேண்டும்" என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.
பிரதமரின் இந்த உரையை பிடித்துக்கொண்ட NHS, மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான அனுப்பப்பட்ட அழைப்பில், "பண்டிகைக் காலத்தில் உங்கள் தடுப்பூசி பரிசைப் பெறுங்கள்" என அனுப்பியுள்ளது.
பிரித்தானியாவில் வியாழன் அன்று 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 120,000 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், பண்டிகை காலங்களில், கட்டுப்பாடுகளை விதிக்கப்படாமல், தடுப்பூசியை மட்டுமே வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது அரசு.