பிரித்தானியாவில் பிறந்த நபர் நாடுகடத்தப்படும் சூழல்: பின்னணியை விளக்கும் செய்தி
பிரித்தானியாவில் பிறந்த ஒருவர், இதுவரை பிரித்தானியாவை விட்டு எந்த நாட்டுக்கும் செல்லாதவர், தற்போது நாடுகடத்தப்படும் ஒரு நிலைமையை எதிர்நோக்கியுள்ளார்.
பிரித்தானியாவில் பிறந்த நபர் நாடுகடத்தப்படும் சூழல்...
டிமிட்ரி லிமா (Dmitry Lima, 28) லண்டனில் பிறந்தவர். அவரது பெற்றோர் போர்ச்சுகல் நாட்டிலிருந்து 30 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா போக்குவரத்து உரிமையைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு வந்தவர்கள்.
பிரித்தானியாவில் பிறந்தும், இதுவரை பிரித்தானியாவை விட்டு வேறெந்த நாட்டுக்கும் செல்லாத நிலையிலும், டிமிட்ரி நாடுகடத்தப்படும் ஒரு சூழல் உருவாகியுள்ளது.
Photograph: Yui Mok/PA
காரணம் என்ன?
விடயம் என்னவென்றால், டிமிட்ரி இத்தனை ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தும், அவர் பிரித்தானிய பாஸ்போர்ட் எடுக்கவில்லை. அவர் பிரித்தானியாவில் வாழ்வதை உறுதி செய்யும் எந்த ஆவணமும் உள்துறை அலுவலகத்திடம் இல்லை.
இரண்டாவதாக, 2020ஆம் ஆண்டு ஆகத்து மாதம், குற்றச்செயல்களுக்காக டிமிட்ரிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வைத்திருந்தது மற்றும் ஆயுதம் ஒன்று வைத்திருந்தது ஆகிய குற்றங்களுக்காக டிமிட்ரிக்கு நான்கு ஆண்டுகள், ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகள் அவர் தண்டனையை அனுபவித்த நிலையில், 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சிறையிலிருந்த டிமிட்ரி போர்ச்சுகல் நாட்டுக்கு நாடுகடத்தப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர் நாடுகடத்தப்படுவதற்காக புலம்பெயர்ந்தோருக்கான தடுப்புக்காவல் மையத்தில் அடைக்கப்பட்டார்.
Image: PAUL GILLIS / Reach PLC
தன் தவறை ஒப்புக்கொண்டுள்ள டிமிட்ரி, அதற்கான தண்டனையையும் தான் அனுபவித்துவிட்டதாகவும், தண்டனைக்காலத்துக்குப் பின் ஒரு புது வாழ்வைத் துவங்க இருந்ததாகவும் கூறுகிறார்.
நான் பிரித்தானியாவில் பிறந்தவன், நான் இங்கேயேதான் வாழ்கிறேன், எனக்கு போர்ச்சுக்கீஸ் மொழி கூட தெரியாது. ஆகவே, நாடுகடத்தப்படும் உத்தரவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன் என்கிறார் டிமிட்ரி.
பிரெக்சிட்டுக்கு முன், சமுதாயத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பயங்கர குற்றங்களில் ஈடுபடும் ஐரோப்பிய ஒன்றியத்தோரே நாடுகடத்தப்படும் நிலை இருந்தது. ஆனால், பிரெக்சிட்டுக்குப் பின் ஐரோப்பிய ஒன்றியத்தார் மட்டுமல்ல, எந்த நாட்டவரானாலும் 12 மாதங்களுக்கு அதிக சிறைத்தண்டனை விதிக்கப்படும் நிலையில், அவர்கள் பொதுமக்கள் நலன் கருதி நாடுகடத்தப்படலாம் என விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆக, பிரித்தானியாவில் பிறந்தும், இத்தனை ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தும், குற்றச்செயல்கள் டிமிட்ரி நாடுகடத்தப்படும் நிலையை உருவாக்கியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |