ஹீலியம் டைனோசர் பலூனிற்கு தலையை விட்ட 5 வயது பிரித்தானிய சிறுவன்: பின்னர் நேர்ந்த எதிர்பாராத சோகம்
பிரித்தானியாவில் ஹீலியம் டைனோசர் பலூனுக்குள் தலையை உட்புகுத்திய 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஹீலியம் பலூனுக்குள் தலையை விட்ட சிறுவன்
பிரித்தானியாவின் கேட்ஸ்ஹெட் பகுதியை சேர்ந்த கார்ல்டன் நோவா டொனகே(Karlton Noah Donaghey) என்ற 5 வயது சிறுவன் ஹீலியம் டைனோசர் பலூனுக்குள் தலையை விட்டு விளையாடிய பிறகு மூளை காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
சிறுவன் கார்ல்டன் நோவா சுயநினைவை இழந்து வீட்டிற்கு விழுந்து கிடப்பதற்கு முன்னதாக தோட்டத்தில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.
Chonicle Live
கடந்த ஜூன் 29ம் திகதி மாலை துடுப்பு நீச்சல் குளத்தில் உறவினர்களுடன் விளையாடி கொண்டு இருந்த ஆடையை மாற்றுவதற்காக வீட்டிற்குள் சென்றுள்ளார்.
அப்போது அங்கு இருந்த ஹீலியம் நிரப்பப்பட்ட பலூனுக்குள் அவரது தலையை விட்டு விளையாடி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதையடுத்து 10 நிமிடங்களுக்கு மேல் ஆகியும் கார்ல்டன் நோவா திரும்பி வராததை அறிந்து கவலை கொண்ட அவரது அம்மா லிசா வீட்டிற்குள் சென்று பார்த்த போது சுயநினைவு இழந்த நிலையில் விழுந்து கிடந்துள்ளார்.
சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்
பின் உடனடியாக மருத்துவ பயிற்சி பெற்ற பக்கத்து வீட்டுக்காரர் முதலுதவி விரைந்து வழங்கியுள்ளார். மேலும் துணை மருத்துவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனர்.
Chonicle Live
ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் கார்ல்டன் நோவா பேரழிவுகரமான மூளை காயமடைந்து 6 நாட்களுக்கு பிறகு உயிரிழந்துள்ளான்.
இதனை தொடர்ந்து கார்ல்டன் நோவா பெற்றோர் ஹீலியம் பலூன்கள் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |