பிரித்தானியாவில் 13 வயது சிறுவனுக்கு நடந்தது என்ன? 33 வயதான பெண் கைது
பிரித்தானியாவில் 13 வயது சிறுவன் மாயம்.
சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணை கைது செய்த பொலிசார்.
பிரித்தானியாவில் 13 வயது சிறுவன் காணாமல் போன சம்பவத்தில் பெண்ணொருவரை பொலிசார் கைது செய்தனர்.
South Yorkshire பொலிசார் கூறுகையில், 13 வயதான Aaron என்ற சிறுவன் கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளான். அவனை கடத்தியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் 33 வயதான பெண்ணை கைது செய்தோம்.
அவர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்ட போதிலும் விசாரணை தொடர்கிறது. Aaron-ஐ மறைத்து வைத்திருப்பவர்கள் கிரிமினல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை உணர வேண்டும்.
SOUTH YORKSHIRE POLICE
அவரை கண்டறிவதற்கான எங்கள் விசாரணைகள் தீவிரமாக தொடர்கின்றன. மேலும் Aaron பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதை உறுதிசெய்ய விரைவில் அவரைக் கண்டுபிடிப்பது கட்டாயமாகிறது. அவர் லண்டன் அல்லது மான்செஸ்டருக்குப் பயணம் செய்திருக்கலாம் என கருதுகிறோம்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட Aaron புகைப்படம் மற்றும் சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளோம்.
அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களை தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளனர்.