ஐன்ஸ்டீன்- ஹாக்கிங் ஆகியோரை பின்னுக்கு தள்ளிய பிரித்தானிய சிறுவன்: IQ-வில் புதிய சாதனை
புகழ்பெற்ற அறிவியலாளர்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகிய இருவரின் நுண்ணறிவு எண்(IQ) விகிதத்தை பிரித்தானியாவின் 11 வயது சிறுவன் முறியடித்துள்ளார்.
உலகின் அதிக IQ கொண்ட மனிதன்
பிரித்தானியாவின் யூசுப் ஷா(11) என்ற சிறுவன் மென்சா டெஸ்ட்(Mensa test)எனப்படும் நுண்ணறிவு எண்(IQ) தேர்வில், நம்ப முடியாத வகையில் 162 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
உலகில் புகழ்பெற்ற அறிவியலாளர்களான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகிய இருவரும் உலகில் அதிக நுண்ணறிவு எண் (IQ) 160 மதிப்பெண்களை பெற்று இருந்த நிலையில், பிரித்தானியா சிறுவன் யூசுப் ஷா அவர்களை விட அதிக மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.
Yusuf shah and his family-யூசப் ஷா மற்றும் அவரது குடும்பம்
பிரித்தானியாவின் லீட்ஸில் உள்ள விக்டன் மூர் தொடக்கப் பள்ளியில் 6 வகுப்பு படிக்கும் சிறுவன் யூசுப் ஷா Yorkshire Evening Post என்ற செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்த தகவலில், பள்ளியில் அனைவரும் நான் புத்திசாலி என்று கருதுகிறார்கள், மற்றும் இந்த தேர்வை எடுக்கும் நபர்களில் முதல் 2 சதவிகிதத்தில் நான் இருந்தேனா என்று அறிய எப்போதும் விரும்பினேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த தேர்வின் ஒரு பகுதியில் கேட்கப்பட்ட 15 கேள்விகளுக்கும் வெறும் மூன்று நிமிடங்களில் பதிலளித்தார், ஆனால் அவர் இதனை செய்து முடிக்க 13 நிமிடங்கள் இருப்பதாக தவறுதலாக கேட்டுள்ளார்.
வருங்கால கனவு
செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள கூடுதல் தகவலில், யூசுப் ஷா மென்சா தேர்வுடன் சேர்த்து, தனது உயர் கல்விக்கான விண்ணப்பத்திற்காகவும் தயாராகி கொண்டு இருந்ததாக தெரிவித்துள்ளது.
Yusuf Shah’s friends in Leeds are always telling him he is very smart, but he wanted to find out for himself by taking the Mensa test.
— Metro (@MetroUK) November 13, 2022
He scored 162 – the maximum IQ for under-18s, putting him in the top one percent of all people.
That's right, *all* people (!!!) pic.twitter.com/iZ1UfCojHB
யூசுப் ஷா வருங்காலத்தில் கேம்பிரிட்ஜ் அல்லது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கணிதம் படிப்பதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும், அதே சமயத்தில் மேல்நிலைப் பள்ளி நுழைவு தேர்வுக்காக ஆக்கப்பூர்வமான எழுதும் திறனில் தயாராகி வருவதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.