உலகிலேயே கோவிட்-19 தடுப்பு மாத்திரைக்கு அங்கீகாரம் அளித்த முதல் நாடு!
உலகிலேயே முதல் நாடாக கோவிட்-19 வைரஸுக்கான தடுப்பு மாத்திரைக்கு பிரித்தானியா அங்கீகாரம் அளித்துள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட Merck & Co Inc (MRK.N) மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியூட்டிக்ஸ் இணைந்து உருவாக்கிய கோவிட்-19 வைரஸ் தடுப்பு மாத்திரையை உலகின் முதல் நாடாக பிரித்தானியா வியாழக்கிழமையன்று அங்கீகரத்துள்ளது.
இந்த மாத்திரை தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் நிலைமையை மாற்றக்கூடிய ஒரு மருந்தாக அமையலாம் என கூறப்படுகிறது.
உடல் பருமன், வயதாகுதல் ஏற்படும் நீரிழிவு, மற்றும் இதய நோய் போன்ற கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி, COVID 19 தோற்றால் குறைந்த அல்லது மிதமான அளவுக்கு பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு, Molnupiravir எனும் இந்த தடுப்பு மாத்திரையை கொடுக்கலாம் என பிரித்தானியாவின் மருந்துகள் மற்றும் உடல்நல தயாரிப்புகள் ஒழுங்குபடுத்தல் முகமை (MHRA) பரிந்துரைக்கிறது.
கோவிட்-19 பரிசோதனையில் தொற்று உறுதியானால், அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் இந்த மாத்திரை கூடிய விரைவில் நிர்வகிக்கப்படும் என்று மருத்துவத் தரவை மேற்கோள் காட்டி MHRA கூறியுள்ளது.
இதே மோல்னுபிராவிர் மாத்திரையை, அமெரிக்க ஆலோசகர்கள் நவம்பர் 30-ஆம் திகதி கூடி, இந்த மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரவை மதிப்பாய்வு செய்து அமெரிக்காவில் அங்கீகரிப்பது குறித்து வாக்களிக்கவுள்ளனர்.