அமெரிக்காவில் பிரித்தானிய பெண் சுட்டுக்கொலை!
அமெரிக்காவில் கோரல் ஸ்பிரிங்ஸில் ரியல் எஸ்டேட் செய்து வந்த பிரித்தானிய பெண் ஒருவர் புளோரிடாவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
40 வயதான Sara Michelle Trost, அவரது காரின் ஓட்டுநர் இருக்கையில் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
"உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது" என்று கோரல் ஸ்பிரிங்ஸ் காவல் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய பெண்ணான Sara Michelle Trost தனது கணவர் மற்றும் அவரது 3 வயது மகளுடன் புளோரிடாவில் வசித்து வந்தார்.
இந்த சம்பவம் டிசம்பர் 23 வியாழக்கிழமையன்று மதியம் 12.33 மணியளவில் நடந்தது.
சம்பவத்தை தொடர்ந்து ரேமண்ட் ரீஸ் (Raymond Wesley Reese) எனும் 51 வயது நபர், கொலை சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ரேமண்ட் ரீஸ், ரியல் எஸ்டேட் ஏஜென்ட் சாராவின் முன்னாள் குத்தகைதாரர் என்று தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு தொடர்பான சூழ்நிலைகளை புலனாய்வாளர்கள் விவரிக்கவில்லை.


