இந்தியர்களை கவுரவிக்க சீக்கிய வீரருக்கு நினைவகம் கட்டும் பிரித்தானியா!
முதலாம் உலகிப்போரில் பிரித்தானியாவுக்காக போரிட்ட இந்திய படை வீரர்களை கவுரவிப்பதற்காக சீக்கிய போர் விமானி ஹர்தித் சிங் மாலிக்கிற்கு நினைவு மண்டபம் பிரித்தானியாவில் கட்டப்படவுள்ளது.
முதலாம் உலகப் போரின்போது இந்தியர்கள், குறிப்பாக சீக்கிய சமூகத்தினர் செய்த பங்களிப்புகளையும் தியாகங்களையும் அங்கீகரிப்பதற்காக கடந்த ஆண்டு ஒரு சீக்கிய சிப்பாயின் சிலையினை நகரின் கோயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டது.
இருப்பினும், போருக்கு சீக்கிய வீரர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்கான ஒரு நிரந்தர நினைவு மண்டபத்தை கட்டுவதற்காகOne Community Hampshire & Dorset (OCHD) அமைப்பால் பிரச்சாரம் நடத்தப்பட்டது.
முதலாம் உலகப் போரில் ஆங்கிலேயர்களுக்காகப் போராடிய 20 ஆம் நூற்றாண்டின் சீக்கிய போர் விமானி ஹர்தித் சிங் மாலிக் அவர்களுக்கு நினைவகத்தை வடிவமைக்க Southampton நகர சபை ஒப்புதல் அளித்துள்ளது.
ராயல் பறக்கும் படையில் விமானியாக பறந்த முதல் இந்தியர் ஹர்தித் சிங் மாலிக் ஆவார்.
இந்த நினைவகம், பிரிட்டிஷ் இந்தியர்களின் தற்போதைய தலைமுறை பிரித்தானிய சமுதாயத்துடனான ஒருங்கிணைப்பு மற்றும் இரண்டு போர்களுடனான அவர்களின் சமூகத்தின் நேரடி தொடர்பு குறித்து பெருமை கொள்ளும் என்று OCHD இன் நிறுவனர் ப்ரிதீபால் சிங் கூறினார்.
மேலும் இந்த நினைவகம் பிரித்தானியாவில் வாழும் சிக்கிய இளைஞர்களுக்கு அவர்களின் பாரம்பரியத்துடன் இணைவதற்கு ஒரு வாய்ப்பை வழங்கும் என்றும் நகரத்தின் முக்கியமான கட்டடக்கலை தளமாகவும் செயல்படும் என்றும் ப்ரிதீபால் சிங் கருதுகிறார்.

