கேரளாவில் பழுதாகி நிற்கும்போதிலும், 15 புதிய F-35B போர் விமானங்களை வாங்கும் பிரித்தானியா
15 புதிய F-35B போர் விமானங்களை வாங்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த ஜூன் 14-ஆம் திகதி அவசர தரையிறக்கம் செய்த பிரித்தானியாவின் F-35B போர் விமானம் இன்னும் சீர் செய்யப்படாத நிலையில் இருந்தாலும், பிரித்தானியா தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் 15 புதிய F-35B போர் விமானங்களை வாங்குவதாக அறிவித்துள்ளது.
[OKMOHL0 ]
பிரித்தானிய அரசின் புதிய திட்டத்தின் முதற்கட்டத்தில் 12 F-35A விமானங்கள் வாங்கப்படவுள்ளன.
இது NATO-வின் Dual Capable Aircraft (DCA) Nuclear Mission-ல் பங்கு பெறும் முக்கியமான முன்னேற்றமாகும்.
இரண்டாம் கட்டத்தில், 12 F-35A மற்றும் 15 F-35B வகை விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது.
பிரித்தானியாவின் பூரண திட்டத்தின்படி, மொத்தம் 138 F-35 விமானங்களை வாங்கும் திட்டத்தை நிர்வகிக்கிறது. இது பிரித்தானியாவின் அணு பாதுகாப்பு நிலைப்பாட்டை இதுவரை இல்லாத அளவுக்கு வலுப்படுத்தும் முயற்சியாகும்.
இந்நிலையில், கன்சர்வேட்டிவ் காட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் Ben Obese-Jecty, கேரளாவில் நிற்கும் விமானம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சர் Luke Pollard, விமானம் RAF படையினரால் 24 மணி நேரமும் பாதுகாக்கப்படுகிறது என்றும், பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
விமானம் முன்னதாக இந்திய மற்றும் பிரித்தானிய கடற்படைகளின் கூட்டு கடல் பயிற்சி (Joint Naval Drill) நிகழ்வில் பங்கேற்றபோது அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
தற்போது பிரித்தானிய நிபுணர்கள் திருவனந்தபுரத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |