பிரித்தானிய அமைச்சரவை மாற்றம்: முக்கிய பதவிகளில் மூன்று இந்திய வம்சாவளி எம்.பிக்கள்
பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம் தனது புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளார். இதில் மூன்று இந்திய வம்சாவளி லேபர் எம்.பிக்கள் முக்கிய முன்னணி பதவிகளை பெற்றுள்ளனர்.
கனிஷ்கா நாராயண் (Kanishka Narayan)
கனிஷ்கா நாராயண், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பீகாரின் முசஃபர்பூரில் பிறந்த அவர், 12 வயதில் குடும்பத்துடன் வேல்ஸுக்கு குடிபெயர்ந்தார். ஈட்டன் கல்லூரி, ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றார். 2024-இல் எம்.பி. ஆனார்.
Kanishka Narayan has been appointed as Minister of State (Minister for Artificial Intelligence) jointly in the @cabinetofficeuk and the Department for Business, Innovation, Science and Trade. He will attend Cabinet. pic.twitter.com/IWxGwmSt2E
— UK Prime Minister (@10DowningStreet) July 20, 2026
சத்வீர் கௌர் (Satvir Kaur)
சத்வீர் கௌர், சவுதாம்ப்டன் டெஸ்ட் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் சமத்துவம், பெண்கள் பாதுகாப்பு, சமூக நீதி போன்ற துறைகளில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெற்றோர் பஞ்சாபில் இருந்து வந்தவர்கள். சவுதாம்ப்டனில் புடவைக் கடை நடத்தினர்.

ஹர்ப்ரீத் உப்பால் (Harpreet Uppal)
ஹர்ப்ரீத் உப்பால், ஹட்ஸ்ஃபீல்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் துணை கொறடா (Assistant Whip) பதவியை பெற்றுள்ளார். இது லேபர் கட்சியின் பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முக்கிய பொறுப்பு ஆகும்.
இந்திய வம்சாவளி எம்.பிக்கள் முன்னணி பதவிகளில் இடம் பெற்றிருப்பது, பிரித்தானிய அரசியலில் இந்தியர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
மேலும், உமா குமரன் (இலங்கைத் தமிழ் வம்சாவளி) வெளிவிவகாரத் துறை அலுவலகத்தில் ஜூனியர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் சீமா மல்ஹோத்ரா மற்றும் ப்ரீத் கௌர் கில் பின்புறப் பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த மாற்றம், பிரித்தானிய அரசியலில் இந்திய வம்சாவளி எம்.பிக்களின் செல்வாக்கை வலுப்படுத்தும் வகையில் பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |