பிரித்தானியாவில் கால்வாய் கரை உடைந்ததால் பரபரப்பு: பள்ளத்தில் சரிந்து விழுந்த படகுகள்
பிரித்தானியாவில் கால்வாய் கரை உடைப்பு காரணமாக கப்பல்கள் பிரம்மாண்ட பள்ளத்தில் சிக்கியுள்ளன.
கால்வாய் கரை உடைப்பு
திங்கட்கிழமை அதிகாலை பிரித்தானியாவின் ஷ்ரோப்ஷயர்(Shropshire) பகுதியில் உள்ள விட்சர்ச்(whitchurch) பகுதியில் அமைந்துள்ள கால்வாய் ஒன்று திடீரென உடைந்து விபத்துக்குள்ளானது.
கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக 50 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய பள்ளம் உருவாகியுள்ளது.

இந்த பள்ளம் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை வெளியேற்றியதோடு, படகுகளையும் இந்த பள்ளத்தில் தள்ளி வருகிறது.
இந்த விபத்தை தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு அவசர நிலை மற்றும் பெரிய அளவிலான விபத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் சிக்கிய 12 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மீட்புப் பணிகள்

கால்வாயில் தண்ணீர் வேகமாக குறைவதை கவனித்த மக்கள் சம்பவ இடத்திற்கு மீட்பு படையின் வருவதற்கு முன்னரே அப்பகுதியில் இருந்து பத்திரமாக வெளியேறினர்.
கால்வாயில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய ஒரு கப்பல் செவ்வாய்க்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டது, மேலும் இரண்டு படகுகளை மீட்கும் பணி புத்தாண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த கால்வாய் உடைப்பை சரிசெய்ய குறைந்தது 6 மாதக் காலம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |