7 பவுண்டுகள் உதவித்தொகை பெறும் புகலிடக்கோரிக்கையாளருக்கு 10,000 பவுண்டுகள் பிரசவ கட்டணம்
பிரித்தானியாவில் நாளொன்றிற்கு 7 பவுண்டுகள் உதவித்தொகை பெறும் புகலிடக்கோரிக்கையாளருக்கு 10,000 பவுண்டுகள் பிரசவ கட்டணம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
10,000 பவுண்டுகள் பிரசவ கட்டணம்
ஜிம்பாபே நாட்டில் பிறந்தவரான கிம் (34), 2017ஆம் ஆண்டு, பிரித்தானியாவில் புகலிடம் கோரினார்.
2022ஆம் ஆண்டு சிசேரியன் முறையில் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார் கிம். அவருக்கு அரசு மருத்துவ அமைப்பு, 10,703.23 பவுண்டுகள் கட்டணம் விதித்தது.
கிம்முக்கு பிரித்தானியாவில் வேலை செய்ய அனுமதி இல்லை. வங்கிக் கணக்கும் இல்லை. அவர் நாளொன்றிற்கு அரசு வழங்கும் 7 பவுண்டுகள் உதவித்தொகையில் வாழ்ந்துவருகிறார்.
இப்படி ஒரு சூழலில் தனக்கு 10,703.23 பவுண்டுகள் கட்டணம் விதிக்கப்படவே, அதிர்ச்சியடைந்துள்ளார் கிம். தன்னால் மாதம் ஒன்றிற்கு 0.01 பவுண்டு வேண்டுமானால் கட்டமுடியும் என்று கூறியுள்ளார் கிம்.
இந்நிலையில், கிம்முக்கு மன வருத்தம் ஏற்பட காரணமாக அமைந்த அந்த விடயத்துக்காக தற்போது வருத்தம் தெரிவித்துள்ள அரசு மருத்துவ அமைப்பு, கிம்மின் நிலை குறித்து அறிந்ததைத் தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்ட பில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |