பிரித்தானியாவில் நல்ல வருவாய் இருந்தும் உணவு வங்கிகளை நாடும் நகரமொன்றின் மக்கள்
இங்கிலாந்திலுள்ள ஒரு பகுதியில் வாழும் மக்கள், உணவு வங்கிகளை நாடுகிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா?
அதுவும், அவர்கள் வீடற்றவர்களோ அல்லது வேலையில்லாதவர்களோ அல்ல!
வருவாய் இருந்தும் உணவு வங்கிகளை நாடும் மக்கள்
இங்கிலாந்தின் Staffordshireஇல் அமைந்துள்ள ஒரு இடம், Cannock Chase. இங்கு வாழ்பவர்களில் ஒருவரான ரெபேக்கா ஃப்ளின், உணவு வங்கிகளுக்கு வராவிட்டால், எங்களுக்கு பாணைத்தவிர வேறு எந்த உணவும் இல்லாத நிலைதான் உள்ளது என்கிறார்.
இத்தனைக்கும், ரெபேக்கா அலுவலகமொன்றில் மேலாளராகப் பணி புரிகிறார், சில பகுதி நேர வேலைகளும் செய்கிறார்.
இப்படி உணவு வங்கியை நாடுவது ரெபேக்கா மட்டுமல்ல, இங்குள்ள உணவு வங்கியை பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒரு பகுதி முழு நேரப் பணி செய்பவர்கள் என்கிறார் உணவு வங்கி ஒன்றின் நிறுவனர்களில் ஒருவரான அலெக்ஸ் சேப்மேன் என்பவர்.
விடயம் என்னவென்றால், பிரித்தானியாவின் மற்ற பகுதிகளில் குறைந்தபட்ச ஊதியம் 21.6 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில், Cannock Chaseஇல் குறைந்தபட்ச ஊதியம் 8.4 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது.
ஆக, இங்குள்ள மக்கள் அயராமல் உழைக்கிறார்கள், கணவனும் மனைவியும் வேலை செய்கிறார்கள், மூன்று வேலைகள் வரை செய்கிறார்கள். ஆனாலும், அடிப்படைத் தேவைகளை மட்டுமே சந்திக்கமுடிகிறது என்கிறார்கள் சிலர்.
ஒரு இன்பச் சுற்றுலா செல்ல விரும்பும் பிள்ளைகளின் ஆசையைக் கூட நிறைவேற்ற முடியவில்லை என்கிறார் லூயிஸ் ஷ்வார்ட்ஸ்.
பல வருடங்களுக்கு முன் hot tub ஒன்றை வாங்கினோம். ஆனால், மின்சாரக் கட்டணத்துக்கு பயந்து அதை பயன்படுத்துவதே இல்லை என்கிறார் அவர்.
மக்கள் முழுநேர வேலை செய்வதால் சொகுசாக வாழ்வதாக பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இந்த விலைவாசியால் அதெல்லாம் சாத்தியம் இல்லை என்பது பலருக்கும் தெரிவதில்லை. காரணம், நாங்கள் அதை வெளியில் சொல்வதில்லை என்கிறார் அவர்.
பிரித்தானியாவுக்குச் சென்றுவிட்டால் போதும், வாழ்க்கைத்தரம் மேம்பட்டுவிடும் என பலரும் நினைக்கிறார்கள். உயிரைப் பணயம் வைத்துக்கூட எப்படியாவது பிரித்தானியாவுக்குச் சென்றுவிடத் துடிப்பவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால், இங்கிலாந்திலுள்ள ஒரு இடத்திலேயேயே, கடினமாக உழைத்தும் மக்கள் உணவு வங்கிகளை நாடும் நிலை காணப்படுகிறது என்னும் செய்தி வியப்பைத்தான் ஏற்படுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |