இந்திய வம்சாவளியினரை பப்படம் என விமர்சித்த பிரித்தானிய பெண் பிரபலம் இடைநீக்கம்?
இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பப்படம் என விமர்சித்த பிரித்தானிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பப்படம் என விமர்சித்த பிரித்தானிய பெண் பிரபலம்
கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Baroness Catherine Meyer (71) என்பவர், தனது சக நாடாளுமன்ற உறுப்பினரான Lord Dholakiaவை இன ரீதியாக விமர்சித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
Meyer தனது சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பயணிக்கும்போது, Dholakiaவை ’Lord Poppadom’ என விமர்சித்துள்ளார்.
பப்படம் அல்லது பொப்படம் என்பது பிரித்தானியாவில் பயன்படுத்தப்படும் ஒரு ஸ்நாக்ஸ் ஆகும்.
என்றாலும், அதே வார்த்தையை, இந்தியர்களை இனரீதியாக கேலி செய்வதற்காக பிரித்தானியர்கள் பயன்படுத்துவதுண்டு.
2007ஆம் ஆண்டு, பிரித்தானியாவின் பிரபலமான பிக் பிரதர் (Big Brother) நிகழ்ச்சியில் இந்திய நடிகையான ஷில்பா ஷெட்டி வெற்றி பெற்றபோது, அவரது சக போட்டியாளரான Jade Goody என்பவர் ஷில்பாவை ‘ஷில்பா பப்படம்’ என விமர்சித்த விடயம் கடும் சர்ச்சையை உருவாக்கியது.
இந்நிலையில், இந்திய வம்சாவளியினரான Dholakiaவை, அதே வார்த்தையைக் கொண்டு Meyer விமர்சித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிகைகள் கமிட்டி, Meyerஐ மூன்று வாரங்கள் இடைநீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |