பிரித்தானியாவில் பணக்காரர்களைக் குறிவைக்கும் சேன்சலர்
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதன் பாதிப்பிலிருந்து இன்னமும் விடுபடவில்லை என்கிறார் பிரித்தானிய சேன்ஸலர்.
பணக்காரர்களைக் குறிவைக்கும் பிரித்தானிய சேன்சலர்
பணக்கார நாடுகள் என நாம் கருதும் மேலை நாடுகள் பல, பட்ஜெட் திட்டமிடல் தொடர்பில் இன்னமும் தடுமாறிக்கொண்டுதான் இருக்கின்றன.
பற்றாக்குறைகளை சரி செய்ய என்ன செய்வது என பல திட்டங்களை யோசித்துக்கொண்டிருக்கிறார்கள் நிதி அமைச்சர்கள்.
பிரான்சில் அப்படி பற்றாக்குறையை சரி செய்வதற்காக இரண்டு பொது விடுமுறைகளைக் குறைக்க பிரதமர் ஒருவர் யோசனை முன்வைக்க, அவரது பதவி பறிபோனதுடன், இன்னமும் அங்கு அரசியலில் நிலையற்ற தன்மையே நீடிக்கிறது.
பிரித்தானியாவிலும் பற்றாக்குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. பிரித்தானியாவின் பொருளாதாரம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதன் பாதிப்பிலிருந்தும், முன்னாள் பிரதமரான லிஸ் ட்ரஸ்ஸின் மினி பட்ஜெட்டால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்தும் இன்னமும் விடுபடவில்லை என்கிறார் பிரித்தானிய சேன்ஸலர் ரேச்சல் ரீவ்ஸ்.
ஆகவே, பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிப்பதன்மூலமும் நிதிப் பற்றாக்குறையை தீர்க்க திட்டம் வைத்துள்ளதாக தெரிவிக்கிறார் அவர்.
கடந்த ஆண்டு இதேபோல் வரி அதிகரிப்பு போன்ற விடயங்கள் குறித்து பேசியபோது, அதனால் நிதிப் பிரச்சினை தீராது, பணக்காரர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிடுவார்கள் என பரவலாக செய்திகள் பரவின என்று கூறும் ரேச்சல், அப்படியெல்லாம் நடக்காது, இது ஒரு புத்திசாலித்தனமான நாடு, மக்கள் இங்கு வாழவே விரும்புகிறார்கள் என்கிறார்.
ஆக, அடுத்த பட்ஜெட்டில் பணக்காரர்கள் குறிவைக்கப்படுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
பிரித்தானிய பட்ஜெட், அடுத்த மாதம், அதாவது, நவம்பர் மாதம் 26ஆம் திகதி தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |