இது நம்முடைய போர் அல்ல, ஆனால்... பிரித்தானிய சேன்ஸலர் கூறும் செய்தி
ஈரான் போரால் பொருட்கள் விலையும், சேவைகளுக்கான கட்டணங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், இது நம்முடைய போர் அல்ல, ஆனால், அது நம் குடும்பங்கள் மற்றும் தொழில்களை பாதிக்கிறது என்று கூறியுள்ளார் பிரித்தானிய சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸ்.

உண்மையில், அவர் மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு வீட்டிலும், சமையல் செய்யும் பெண்களும் அதையே சொல்கிறார்கள்.
நாம் எந்த பிரச்சினைக்கும் செல்லாத நிலையில், எங்கோ யாரோ ஒரு நபர் துவக்கிய பிரச்சினை, நம் வீட்டு உணவு மேசையில் வந்து தொல்லையாக நிற்கிறதே என்கிறார்கள் அவர்கள்!
மனைவி குடும்பத்தைக் கொல்ல முயன்றதற்காக இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட இந்தியர்: நாடுகடத்தும் முயற்சி துவக்கம்
ஈரான் போர் ஏற்படுத்திவரும் தாக்கம்
ஈரான் போர், மற்றும் அதைத் தொடர்ந்து ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர, அதனால் பெட்ரோல் டீசல் விலைகளும் உயர்ந்துவருகின்றன. எரிபொருள் விலைகள் அதிகரித்ததால் பணவீக்கம் அதிகரிக்க, விமான கட்டணங்களும், உணவுப்பொருட்கள் விலையும் உயர்ந்துவருகின்றன.
The Consumer Prices Index (CPI) rose by 3.3% in the 12 months to March 2026, up from 3.0% in the 12 months to February 2026.
— Office for National Statistics (ONS) (@ONS) April 22, 2026
Read more on the March inflation figures ➡️ https://t.co/IkzAuUmbLX pic.twitter.com/aesupoNkFJ
இந்நிலையில்தான், இது நம்முடைய போர் அல்ல, ஆனால், அது நம் குடும்பங்கள் மற்றும் தொழில்களை பாதிக்கிறது என்று கூறியுள்ளார் பிரித்தானிய சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸ்.
அதனால் விலைவாசியை கட்டுக்குள் வைப்பதற்காக சில முயற்சிகளை அரசு எடுத்துவருவதாகத் தெரிவித்துள்ள ரேச்சல், ஏப்ரல் மாத மின் கட்டணத்தில் 117 பவுண்டுகள் குறைத்துள்ளோம், ரயில் கட்டணங்களை அதிகரிக்காமல் தடுத்துவைத்துள்ளோம், எரிபொருள் மீதான மறைமுக வரியை அதிகரிக்காமல் வைத்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |