பிரித்தானிய சிறார்களை காவுவாங்கும் கொடிய நோய்... பீதியில் குடும்பங்கள்: இதுவரையான பின்னணி

London Heart Attack Death
By Arbin Dec 03, 2022 04:16 PM GMT
Report

பிரித்தானியாவில் வேகமாக பரவும் கொடிய பாக்டீரியாவுக்கு இதுவரை 6 சிறார்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

துவக்கப் பள்ளி சிறார்களில் பாக்டீரியா பாதிப்பு

சதை உண்ணும் அந்த கொடிய பாக்டீரியாவுக்கு Strep A என பெயரிட்டுள்ளனர். பிரித்தானியா முழுமையும் துவக்கப் பள்ளி சிறார்களில் குறித்த பாக்டீரியா கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 6 மரணங்கள் இந்த பாக்டீரியா தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானிய சிறார்களை காவுவாங்கும் கொடிய நோய்... பீதியில் குடும்பங்கள்: இதுவரையான பின்னணி | Uk Child Dies From Wildfire Bacteria

Image: Just Giving

சர்ரே மற்றும் வேல்ஸில் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் வைகோம்பில் உள்ள ஒரு குடும்பம் அவர்களின் நான்கு வயது மகன் முகமது இப்ராஹிம் அலிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதிர்ச்சி தகவலை பதிவு செய்துள்ளனர்.

மேலும், பிரித்தானியாவின் சுகாதார பாதுகாப்பு அமைப்பான UKHSA இந்த விவகாரம் தொடர்பில் உறுதி செய்துள்ளதுடன், இதுவரை 6 பேர் Strep A பாக்டீரியா பாதிப்பால் இறந்துள்ளதையும் உறுதி செய்துள்ளனர்.

இதுவரை 6 சிறார்கள் பலி

சர்ரே பகுதியில் 6 வயது சிறுவன், குறித்த தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. வேல்ஸ் பகுதியில், விக்டோரியா துவக்கப் பள்ளியில் சிறார் ஒருவர் குறித்த கொடிய பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு, பின்னர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய சிறார்களை காவுவாங்கும் கொடிய நோய்... பீதியில் குடும்பங்கள்: இதுவரையான பின்னணி | Uk Child Dies From Wildfire Bacteria

Image: Google Streetview

மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு எப்போது சிகிச்சை முன்னெடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

நான்கு அல்லது ஐந்து நாட்களாக காய்ச்சல் விடாமல் நீடித்தால், அல்லது வேகமாக மூச்சு வாங்கினால் உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையை முன்னெடுக்க வேண்டும். தற்போது இந்த கொடிய வியாதி சிறார்களில் பரவலாக காணப்படுகிறது என குறிப்பிட்டுள்ள மருத்துவர் ஒருவர், இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொற்றின் தீவிரம் 670% அதிகரிப்பு

பிரித்தானியா முழுக்க இதுவரை 861 சிறார்கள் குறித்த வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் இந்த தொற்றின் தீவிரம் 670% அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

லிவர்பூலில் உள்ள மருத்துவமனையில் நான்கு வயது சிறுமி ஒருவர் நோய் தொற்றுக்கு ஆளாகி வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார். 10 வயதுக்கு உட்பட்ட மேலும் இரு சிறார்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இந்த 7 நாட்களில் இறந்துள்ளனர்.

ஆனால் அவர்கள் குறித்த வியாதி காரணமாக இறந்தார்களா என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US