7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையை தொடங்கும் பிரித்தானியா
பிரித்தானியா, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையை தொடங்கவுள்ளது.
பிரித்தானிய அரசு, 2028-க்குப் பிறகு முதல்முறையாக சீனாவுடன் அதிகாரபூர்வ வர்த்தக பேச்சுவார்த்தையை தொடங்கவுள்ளது.
இந்த முயற்சி, பிரித்தானிய நிறுவனங்களுக்கு புதிய சந்தைகளை திறக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியாவின் புதிய வர்த்தக மற்றும் தொழில்துறை செயலாளர் Peter Kyle தலைமையில், UK-China Joint Economic and Trade Commission (JETCO) கூட்டம் சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது.
இந்த ஓச்சுவார்தையின் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் 1 மில்லியன் பவுண்டு மதிப்பிலான சந்தை அணுக்கள் வாய்ப்புகளை பெறுவது இலக்காகும்.
பிரித்தானிய நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செயல்முறைகளை எளிதாக்கும் வகையில் ஒப்பந்தங்களை இறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
கடந்த நிதியாண்டில், பிரித்தானியா ஏற்கெனவே 2 பில்லியன் பவுண்டு மதிப்பிலான பொருட்களை சீனாவிற்கு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளது. இதில், Creative Industries மற்றும் retail துறைகள் முக்கிய பங்காற்றியுள்ளன.
விரைவாக வளர்ந்து வரும் சீனாவின் நடுத்தர வர்க்க சந்தையை பய்னபடுத்தி, பிரித்தானிய நிறுவனங்கள் உலகளாவிய வளர்ச்சியில் பங்குபெற முயற்சிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK China trade talks 2025, Peter Kyle Beijing visit, UK-China JETCO summit, UK export deals with China, British market access China, UK-China economic cooperation, UK trade secretary China trip, China middle class market UK, UK automotive exports to China