அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்: நியோ-நாசி அமைப்புடன் தொடர்பு
நியோ நாசி அமைப்புடன் தொடர்புடையவராக கருதப்படும் பிரித்தானியர் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட உள்ளார்.
நாடு கடத்தப்படும் பிரித்தானியர்
மேற்கு அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
நடத்தை மற்றும் ஒழுக்க நடைமுறைகளில் ரியான் டர்னர்(Ryan Turner) என்பவரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்பதால் அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த செவ்வாய்க்கிழமை ரியான் டர்னர் அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய வாழ் சமூகத்தினருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அல்லது தேவையற்ற நடத்தை வைத்து இருக்கும் வெளிநாட்டினரின் விசாவை ரத்து செய்யும் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு அந்நாட்டின் சட்டம் வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா ரத்து செய்யப்பட்டுள்ள ரியான் டர்னர் நேஷனல் சோஷலிஸ்ட் நெட்வொர்க்(national Socialist Network) தீவிர வலதுசாரி அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |