காசா எல்லை திறக்கப்பட்டதாக வெளியான அறிவிப்பு: பெரும் ஏமாற்றமடைந்துள்ள பிரித்தானியர்கள்
காசாவிலிருந்து பிரித்தானியர்கள் சிலர் வெளியேறியுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால், வெளியேற அனுமதிக்கப்படுவோர் பட்டியலில் வெறும் இரண்டு பிரித்தானியர்கள் மட்டுமே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசாவிலிருந்து வெளியேற சிலருக்கு அனுமதி
படுகாயமடைந்தவர்கள் மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள், காசாவிலிருந்து ரஃபா என்னும் காசா எகிப்து எல்லை வழியாக வெளியேற, குறிப்பிட்ட நேரத்துக்கு அனுமதியளிக்கப்படுகிறது.
இந்த ரஃபா என்பது, எகிப்துக்கும் காசாவுக்கும் இடையிலான ஒரே எல்லை கடக்கும் பகுதியாகும். அவ்வகையில், நேற்று நூற்றுக்கணக்கானோர் காசாவிலிருந்து எகிப்துக்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.
காசாவிலிருந்து முதல் பிரித்தானியர்கள் வெளியேறியதாக அறிவிப்பு
காசாவில், பிரித்தானியர்கள் அல்லது இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் 200 பேர் இருப்பதாக கருதப்படுகிறது. இந்நிலையில், காசாவிலிருந்து சில பிரித்தானியர்கள் வெளியேறியுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பெரும் ஏமாற்றமடைந்துள்ள பிரித்தானியர்கள்
காசாவிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவதாக தகவல் கிடைத்ததும், பல பிரித்தானியர்கள் குடும்பத்துடன் எல்லைக்குச் சென்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு அங்கு ஏமாற்றமே காத்திருந்துள்ளது.
நாளொன்றிற்கு 500 பேர் எல்லை கடக்க அனுமதிக்கப்படும் நிலையில், காசாவிலிருந்து வெளியேற விரும்பும் பிரித்தானியர்களின் பெயர் பட்டியல், எகிப்திய மற்றும் இஸ்ரேல் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
Photograph: Majdi Fathi/NurPhoto/Shutterstock
ஆனால், அந்த பட்டியலில், காசாவிலிருக்கும் 200 பிரித்தானியர்களில், இரண்டு பிரித்தானியர்களின் பெயர்கள் மட்டுமே இருந்ததால், காசாவிலிருக்கும் பிரித்தானியர்களின் உறவினர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.
இதற்கிடையில், பிரித்தானியர்களின் முதல் அணி காசாவிலிருந்து வெளியேறிவிட்டதாக பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் கூறினாலும், அந்த பட்டியலிலிருந்த லிவர்பூலைச் சேர்ந்த Abdel Hammad என்னும் மருத்துவரும், தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் மற்றொரு பிரித்தானியரும், காசா எல்லையை அடையும் முன் எல்லை மூடப்பட்டுவிட்டதாகவும், ஆகவே, அவர்களால் காசாவிலிருந்து வெளியேற முடியாமல் போய்விட்டதாகவும், பிரித்தானியாவிலிருக்கும் Abdelஇன் மகனான Salim Hammad என்பவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |