பிரித்தானிய குடியுரிமை சோதனை... இளவரசர் ஹரிக்கும் விடை தெரியாத கேள்விகள்: அம்பலப்படுத்திய மேகன்
பிரித்தானிய குடியுரிமை பெறுவதில் தமக்கேற்பட்ட அனுபவம் தொடர்பில் மேகன் மெர்க்கல் பகிர்ந்துள்ளார்
கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் தமது கணவர் ஹரிக்கும் பதில் தெரியவில்லை என மேகன்
பிரித்தானிய குடியுரிமை சோதனை மிகவும் கடினமாக இருந்தது எனவும், பல கேள்விகளுக்கு இளவரசர் ஹரிக்கே விடை தெரியவில்லை எனவும் மேகன் மெர்க்கல் அம்பலப்படுத்தியுள்ளார்.
பிரித்தானிய ராஜகுடும்பத்தில் இருந்து வெளியேறி அமெரிக்காவுக்கு குடியேறும் முன்னர், 2020ல் மேகன் மெர்க்கல் பிரித்தானிய குடியுரிமை பெறும் முயற்சிகளை மொத்தமாக கைவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
PHOTO: SAMIR HUSSEIN/WIREIMAGE
சமீபத்தில் பிரித்தானிய குடியுரிமை பெற்றுக்கொண்ட நகைச்சுவையாளர் Pamela Adlon உடன் முன்னெடுத்த உரையாடலின் போதே பிரித்தானிய குடியுரிமை பெறுவதில் தமக்கேற்பட்ட அனுபவம் தொடர்பில் மேகன் மெர்க்கல் பகிர்ந்துள்ளார்.
பிரித்தானிய குடியுரிமை பெற, நாட்டின் வரலாறு மற்றும் பழக்கவழக்கங்கள் தொடர்பான 24 கேள்விகளுக்கு 45 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும். ஆனால் தமக்கு அந்த கேள்விகள் மிகவும் கடுமையாக இருந்தது என மேகன் மெர்க்கல் குறிப்பிட்டுள்ளார்.
@getty
மட்டுமின்றி, அதில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு தமது கணவர் ஹரிக்கும் பதில் தெரியவில்லை எனவும் மேகன் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட நகைச்சுவையாளர் Pamela Adlon, அவர்கள் கேள்விகளை உங்களுக்காக கடுமையாக்கி இருக்கலாம் என கருதுகிறேன் என வேடிக்கையாக கூறினார்.
2018ல் இளவரசர் ஹரியுடன் திருமணம் முடிந்த பின்னர், பிரித்தானிய குடியுரிமை பெறுவதற்கான நடவடிக்கையில் மேகன் மெர்க்கல் களமிறங்கியுள்ளார்.
ஆனால், 2020ல் ராஜகுடும்பத்து மூத்த உறுப்பினர்கள் அந்தஸ்தை கைவிட்டு, அமெரிக்காவுக்கு திரும்பும் நிலையில், முயற்சிகளை கைவிட்டதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.