ஐரோப்பாவிலேயே மிக ஆபத்தான நகரம்... பிரித்தானியாவில்: ஆய்வில் வெளியான தகவல்
பிராட்ஃபோர்ட் நகரில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது - களவு, கொள்ளை, தாக்குதல் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஆய்வுகளின் உண்மைத் தன்மை குறித்து மக்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன் சந்தேகவும் - புறந்தள்ளிய மாவட்ட நிர்வாகம்
பிரித்தானியாவின் பிராட்ஃபோர்ட் நகரம் ஐரோப்பாவிலேயே மிகவும் ஆபத்தானது என ஆய்வில் தெரியவந்துள்ளது. குறித்த ஆய்வறிக்கைகளால் மக்கள் இவ்வாறான நகரங்களில் இருந்து வெளியேற உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் பிராட்ஃபோர்ட் நகரில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும், அத்துடன் களவு, கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
@getty
நாட்டிலிருந்து வரும் பல ஆதாரங்களின்படி, உலகில் உள்ள ஒவ்வொரு நகரத்திற்கும் குற்றங்களுக்கான குறியீடு மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது, 20க்கும் குறைவான மதிப்பெண் என்றால் குற்றங்கள் குறைவாக இருப்பதாக அர்த்தம்.
குறித்த பட்டியலின் அடிப்படையில், ஐரோப்பாவிலேயே மிகவும் ஆபத்தான நகரமாக பிராட்ஃபோர்ட் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டுமின்றி, உலகில் மிகவும் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் பிராட்ஃபோர்ட் நகருக்கு 26வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐரோப்பாவிலேயே மிகவும் ஆபத்தான இரண்டாவது நகரமாக பிரித்தானியாவின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் உள்ள கோவென்ட்ரி நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பல நகரங்களுடன் ஒப்பிடுகையில், குறிப்பிட்ட இரண்டு நகரங்களும் ஒப்பீட்டளவில் அதிக குற்ற விகிதங்களைக் கொண்டுள்ளன என்றே ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிராட்ஃபோர்ட் நகரில் 1,000 பேர்களுக்கு 146 குற்றச்செயல்கள் நடப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கோவென்ட்ரி நகரத்தில் 1,000 பேர்களுக்கு 102 குற்றச்செயல்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
@getty
ஆனால் இந்த ஆய்வுகளின் உண்மைத் தன்மை குறித்து மக்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன் சந்தேகவும் தெரிவித்துள்ளனர். 2021ல் பர்மிங்காம் நகரில் 1,000 பேர்களுக்கு 137 குற்றச்செயல்கள் என பதிவாகியுள்ளது.
இதனிடையே பிராட்ஃபோர்ட் நகரம் தொடர்பில் வெளியான இந்த ஆய்வறிக்கையை மாவட்ட நிர்வாகம் புறந்தள்ளியுள்ளது. பிராட்ஃபோர்ட் நகரம் குற்றச்செயல்களில் முதலிடத்தில் இருப்பதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராட்ஃபோர்ட் நகரம் குடியிருக்க மட்டுமின்றி வேலைக்கும் சுற்றுலாவுக்கும் பாதுகாப்பானது என நகர நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.