திறமையானவர்களை ஈர்க்க விசா கட்டணத்தை ரத்து செய்ய பிரித்தானியா பரிசீலனை
திறமையானவர்களை ஈர்க்க Global Talent விசாவிற்கான கட்டணத்தை ரத்து செய்ய பிரித்தானியா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Global Talent Visa
அமெரிக்க அதிபர் டிரம்ப், சமீபத்தில் அமெரிக்காவில் பணிபுரிவதற்கான H1B விசா கட்டணத்தை 1 லட்சம் டொலராக உயர்த்துவதாக அறிவித்தார்.
அமெரிக்க நிறுவனங்கள், அமெரிக்கர்களை அதிகளவில் பணியமர்த்த வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, H1B விசாவில் அமெரிக்கா சென்றவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதேவேளையில், உலகளாவிய திறன்மிக்க நிபுணர்களை பிரித்தானியாவிற்கு ஈர்க்கும் வகையில், அவர்களுக்கான விசா கட்டணத்தை ரத்து செய்ய பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆலோசித்து வருகிறார்.
உலகின் சிறந்த விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் டிஜிட்டல் நிபுணர்களை பிரித்தானியாவிற்கு ஈர்ப்பதற்கான ஆலோசனைகளில் ஸ்டார்மரின் global talent task force ஈடுபட்டு வருகிறது.
தற்போது, பிரித்தானியாவின் Global Talent Visa பெற, 766 பவுண்டுகள் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பேசிய அதிகாரி ஒருவர், "அமெரிக்க ஜனாதிபதியின் H1B விசா கட்டண உயர்வு அறிவிப்புக்கு முன்பு இருந்தே இந்த யோசனை பரிசீலனையில் இருந்தது. தற்போது, அமெரிக்க ஜனாதிபதியின் கட்டண உயர்வு அறிவிப்பு, பிரித்தானியாவின் திட்டத்துக்கு சாதகமாக அமைந்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |