பைக்குள் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையின் உடல்: தாயைத் தேடும் பொலிசார்
இங்கிலாந்தில் நதி ஒன்றின் அருகே கிடந்த பை ஒன்றிற்குள் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை ஒன்றின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செவ்வாயன்று, இங்கிலாந்தின் லங்காஷையரிலுள்ள ஹோடர் நதியின் அருகே, பை ஒன்றிலிருந்து நச்சுக்கொடி போன்ற ஒன்று எட்டிப்பார்ப்பதைக் கவனித்த வழிப்போக்கர் ஒருவர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
அதிர்ச்சியை ஏற்படுத்திய கண்டுபிடிப்பு
ஆனால், அந்தப் பையிலிருந்தது நச்சுக்கொடி அல்ல, அது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை ஒன்றின் உடல் என்பது தெரியவந்துள்ளது.

அது குறித்து விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ள பொலிசார், அந்தக் குழந்தையின் தாய்க்கு மருத்துவ உதவி தேவைப்படக்கூடும் என்னும் நோக்கில் அந்தப் பெண்ணைத் தேடிவருகிறார்கள்.
என்ன நடந்தது என்பது யாருக்காவது நிச்சயம் தெரிந்திருக்கும் என்று கூறியுள்ள பொலிசார், இந்த விடயம் தொடர்பில் யாருக்காவது தகவல் தெரிந்தால் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |