கையில் மொபைலுடன் கார் ஓட்டிய நபரை குதிரையில் துரத்திய பிரித்தானிய பொலிஸார்
பிரித்தானியாவில் குதிரையில் ரோந்து சொல்லும் இரண்டு பொலிஸார், மொபைல் போனை பயன்படுத்திக்கொண்டு வாகனம் ஓட்டிய நபரை துரத்தி பிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மவுண்டட் பொலிஸ்
யுனைடெட் கிங்டமின் நேஷனல் பொலிஸ் தலைவர் கவுன்சிலின் இரண்டு மவுண்டட் பொலிஸ் அதிகாரிகள் (குதிரையில் ரோந்து செல்லும் பொலிஸ்), சாலையில் வாகனம் ஓட்டும் போது தனது மொபைல் போனை வைத்திருப்பதைக் கண்ட ஒருவரைத் துரத்திப் பிடித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இரு அதிகாரிகளும், குதிரையின் மீது ஏறி, வாகனம் ஓட்டும் போது போன் பேசியதாக சந்தேகப்பட்ட ஒரு காரை விரட்டிச் சென்று நிறுத்தினார்கள். பிரித்தானியாவில், வாகனங்களுக்கு பின்னால் தொலைபேசியைப் பயன்படுத்தும் ஓட்டுநர்களின் எண்ணிக்கையைச் சரிபார்க்கும் பணி நாடு முழுவதும் காவல்துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளது.
RPU
வைரல் வீடியோ
ட்விட்டரில், Avon மற்றும் Somerset காவல்துறையின் சாலைப் பாதுகாப்புப் பிரிவு ASPolice Roads Policing (RPU) குதிரைகளில் இரண்டு அதிகாரிகள் சில்வர் நிற காரைத் துரத்திச் சென்ற சம்பவத்தைப் பகிர்ந்துள்ளனர்.
டிரைவரை நிறுத்திய பொலிஸார், "உங்கள் போனை பயன்படுத்தக் கூடாது என்று உங்களுக்குத் தெரியும்" என்று கூறினர். அதற்கு டிரைவர், "இல்லை, நன் இசை எதுவும் கேட்கவில்லை. எனக்கு ஒரு பிரச்சனை உள்ளது" என்று பதிலளித்தார்.
அதற்கு அதிகாரி, "ஆனால் நீங்கள் வாகனம் ஓட்டுகிறீர்கள், நீங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள், உங்கள் போனில் ஒரு அழைப்பு தொடர்ந்து கொண்டிருப்பதை நான் பார்க்கிறேன்" என்று கூறினார்.
Officers from @ASPoliceHorses have been supporting #OpTelecom, our operation to clamp down on the risk posed by drivers who use their phone at the wheel. This driver was sighted & stopped on East Reach, #Taunton. Drivers face 6 points & £200 fine if caught using a phone.#FATAL5 pic.twitter.com/sW3YXWcaMU
— ASPolice Roads Policing (RPU) (@ASPRoadSafety) March 14, 2023
200 பவுண்டுகள் அபராதம்
"ASPoliceHorses-ன் அதிகாரிகள் OpTelecom-ஐ ஆதரித்து வருகின்றனர், சக்கரத்தில் செல்போனைப் பயன்படுத்தும் ஓட்டுநர்களால் ஏற்படும் ஆபத்தைக் குறைகப்பது எங்கள் நடவடிக்கையாகும். இந்த ஓட்டுனர் டவுன்டன், கிழக்கு ரீச்சில் பார்க்கப்பட்டு நிறுத்தப்பட்டார். இங்கு ஓட்டுநர்கள் மொபைல் போனை பயன்படுத்தினால் 6 புள்ளிகள் மற்றும் 200 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும்" என்று சாலை காவல் பிரிவு ட்விட்டரில் எழுதியது.
மீறுபவருக்கு போக்குவரத்து விதிமீறல் அறிக்கை வழங்கப்படும் என்றும், மேலும் 200 பவுண்டுகள் அபராதம் மற்றும் அவரது உரிமத்தின் மீது 6 புள்ளிகள் வழங்கப்படும் அல்லது மீறுபவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்றும் பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ASPoliceHorses பல்வேறு இடங்களில் ரோந்து செல்லும் காவல்துறை அதிகாரிகளின் படங்களைப் பகிர்ந்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.