பிரித்தானியாவில் குறையாத கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் புதிதாக 32,253 பேருக்கு தொற்று
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,253 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,253 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 64,92,906 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 131,640-ஆக உயர்ந்துள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 35,936 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 5,056,571 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது கொரோனா பாதிப்புடன் 1,304,695 பேர் சிகிச்சை பெற்று வருவதாக பிரித்தானிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்ற சனிக்கிழமை அன்று புதிதாக 32,058 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது மற்றும் 104 பேர் உயிரிழந்தனர். அதேபோல், இந்த வாரம் வெள்ளிக்கிழமை 37,314 புதிய பாதிப்புகள் மற்றும் 114 இறப்புகள் பதிவு செய்யப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 89,331,700 தடுப்பூசிகள் பிரித்தானியா முழுவதும் செலுத்தப்பட்டன. அதில் 47,643,064 பேருக்கு முதல் டோஸ் மற்றும் 41,688,636 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.