பிரித்தானியாவில் அதிகரிக்கும் பணவீக்கம்: புதிய கட்டத்துக்கு நகரும் உணவு பொருட்களின் விலை
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தால், உணவுப் பொருட்களின் விலை புதிய கட்டத்திற்கு நகர்ந்திருப்பதாக ஆராய்ச்சியின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் பணவீக்கம்
பிரித்தானியாவில் வாழ்க்கை செலவுக்கான நெருக்கடி அதிகரித்து வருவதாக, பல அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு சராசரியாக, £1,000 பவுண்ட் உணவுக்காக செலவு செய்ய வேண்டிய சூழல் உண்டாகும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
@getty images
இதனிடையே உணவு பொருட்களின் விலை கடந்த ஐம்பது ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தற்போது அதிகரித்திருப்பதாகவும், இது வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அடித்தட்டு மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவர், ஏனென்றால் அவர்கள் உணவு பொருட்களுக்காக,ஏற்கனவே செலவு செய்ததை விட, அளவிற்கு அதிகமாக செலவு செய்ய வேண்டி வரும் என்பதால் சேமிப்பிற்கான வழி இருக்காது என தெரிகிறது.
உணவு பொருட்களின் விலை பற்றிய எச்சரிக்கை
இந்நிலையில், பிரித்தானிய அரசு மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் இதனை முக்கிய பிரச்சனையாக எடுத்து, சரி செய்ய வேண்டும் என பொருளாதார நிபுணர் லலிதா தெரிவித்துள்ளார்.
’வறட்சியான இந்த கோடை காலத்தில் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பதால், நடுத்தர குடும்பத்தினர் மிகவும் சிரமத்தை சந்திக்கிறார்கள். பிரித்தானிய மக்களின் வாழ்க்கை செலவு நெருக்கடி இன்னும் முடியவில்லை, அது தற்போது புதிய பரிமாணத்தை எடுத்துள்ளது’ என அவர் எச்சரித்துள்ளார்.
@@getty images
பிரித்தானிய பொருளாதார நிபுணர்களால் இன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பெரும்பாலான மக்கள் தங்கள் வருமானத்தில் 13% உணவுக்காக செலவிடுகின்றனர், இது கோவிட்க்கு முன் 5% ஆக இருந்ததாக கூறியுள்ளனர்.
மேலும் பிரித்தானியாவிலுள்ள 61% ஏழைக் குடும்பங்கள் உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் பயன்பாட்டை குறைத்துள்ளன என தெரிகிறது.
@@getty images
இந்நிலையில் மார்ச் மாதத்தில் உணவு பொருட்களின் விலை அதிகப்படியாக 19.1% சதவீதத்தை தொட்டது, மேலும் இது இன்னும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.