பிரித்தானியாவில் வெள்ளம் ஓடிய சாலையில் சென்ற கார்: கணவன் மனைவிக்கு நேர்ந்துள்ள சோகம்
பிரித்தானியாவில் வெள்ளம் ஓடிய சாலையில் காரில் சென்ற தம்பதி உயிரிழந்த சம்பவம் சமூகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் உயிரிழந்த தம்பதி
பிரித்தானியாவின் மெர்சிசைடில் மோஸ்லி ஹில் பகுதியில் வெள்ளம் மூழ்கிய பகுதிக்குள் கருப்பு நிற மெர்சிடிஸ் காரில் சென்ற தம்பதி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த 75 வயதான மனைவி எலைன் மார்கோ மற்றும் 77 வயதான கணவர் பிலிப் மார்கோ இருவரும் தங்களது 54வது திருமண ஆண்டை கொண்டாட இருந்தனர்.
சனிக்கிழமை இரவு 9:20 மணிக்கு காரில் ஆணும் பெண்ணும் பாதுகாப்பு தேவைகளுடன் இருப்பதாக பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இருப்பினும் அவர்கள் உயிரிழந்து விட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டனர்.
குடும்பத்தினர் இரங்கல்
இந்நிலையில் எலைன் மார்கோ மற்றும் பிலிப் மார்கோ இருவரின் குடும்பத்தினரும் வெளியிட்ட அறிக்கையில், இருவரின் திடீர் இழப்பால் நாங்கள் பேரழிவிற்கு உள்ளாகி மனமுடைந்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் சாலையில் சென்று கொண்டு இருந்த அவர்கள் எவ்வாறு உயிரிழந்தனர் என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவற்றில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், எலைன் மார்கோ மற்றும் பிலிப் மார்கோ இருவரும் கண்டெடுக்கப்பட்ட கார் சாலையின் 180 டிகிரி கோணத்தில் திரும்பி இருந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |