இளம் வயதில் மகளை இழந்து தவித்துவரும் பிரித்தானிய தம்பதி: பிரான்ஸ் பொலிசார் மீது குற்றச்சாட்டு...
33 ஆண்டுகளுக்கு முன் தங்கள் அன்பு மகளை சீரழித்துக் கொன்ற பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் தொடர்பில், பிரான்ஸ் பொலிசார் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர் ஒரு பிரித்தானிய தம்பதியர்.
தகாத ஆசைக்கு பலியான இளம்பெண்கள்
பிரான்சில் பிறந்த Michel Fourniret என்பவர் 1966ஆம் ஆண்டு, இளம்பெண் ஒருத்தியை பாலியல் ரீதியாக தாக்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்த காலத்தில், Michelக்கு Monique Olivier என்ற பெண்ணுடைய பேனா நட்பு கிடைத்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு எழுதிய கடிதங்களில், தனது மனதிலுள்ள தவறான ஆசைகளையெல்லாம் வெளிப்படுத்தியுள்ளார் Michel.
Photograph: PA
கன்னிப்பெண்களாக தேர்வு செய்து அவர்களை சீரழித்துக் கொலை செய்யவேண்டும் என்பது தனது ஆசை என Michel கூற, தனது கணவனைக் கொலை செய்ய உதவினால் Michelஉடைய ஆசைகளை நிறைவேற்ற உதவுவதாக வாக்களித்துள்ளார் Monique.
1987ஆம் ஆண்டு Michel விடுதலை பெற, Moniqueக்கும் அவருக்கும் தவறான உறவு ஏற்பட்டுள்ளது. அத்துடன் இருவருமாக சேர்ந்து இளம்பெண்களைக் குறிவைத்துள்ளார்கள்.
காரில் லிஃப்ட் தருவதாக Monique இளம்பெண்களை ஏமாற்றி அழைத்துவர, கூடவந்து இணைந்துகொள்ளும் Michel அந்த இளம்பெண்களை வன்புணர்ந்து கொலை செய்வார். இப்படி 8 முதல் 12 இளம்பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் இங்கிலாந்திலுள்ள Newnham என்ற இடத்தைச் சேர்ந்த Joanna Parrishம் ஒருவர்.
பிரான்ஸ் பொலிசார் மீது குற்றச்சாட்டு
Michel மற்றும் Moniqueஆல் கொல்லப்பட்ட, இங்கிலாந்திலுள்ள Newnham என்ற இடத்தைச் சேர்ந்த Joanna Parrishஇன் பெற்றோர், பிரான்ஸ் பொலிசாரின் கவனக்குறைவே அத்தனை இளம்பெண்களின் மரணங்களுக்குக் காரணம் என்று கூறியுள்ளார்கள்.
பிரான்ஸ் பொலிசார் மட்டும் தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்திருந்தால், தங்கள் மகள் Joanna உட்பட, பல இளம்பெண்களைக் காப்பாற்றியிருக்கமுடியும் என்கிறார்கள் Joannaவின் பெற்றோரான Roger Parrish, Pauline Murrell தம்பதியர்.
Photograph: Adrian Sherratt
Joanna பிரான்சிலுள்ள Auxerre என்னுமிடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றிக்கொண்டிருந்த நேரத்தில், Michel ம் Moniqueம் அந்த பள்ளியை நோட்டம் விட்டுள்ளார்கள். அதாவது, Joanna மீது கண் வைத்துள்ளார்கள்.
அப்போது, அவர்கள் அந்தப் பள்ளியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டது குறித்து எழுந்த சந்தேகம் தொடர்பில், பிரான்ஸ் பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
Photograph: Miguel Medina/AFP/Getty Images
அதேபோல, Michel மற்றும் Moniqueஆல் கொல்லப்பட்ட மற்றொரு இளம்பெண்ணின் தாத்தாவும் பாட்டியும் ஒரே கிராமத்தில்தான் வாழ்ந்துள்ளார்கள். அப்போதே Michel பாலியல் குற்றவாளி என அறியப்பட்டவர்.
ஆக, இப்படி ஒரு பாலியல் குற்றவாளி அந்த கிராமத்தில் வாழ்ந்துவந்த நிலையில், பொலிசார் ஏன் அவரை கண்காணிக்கவில்லை, விசாரிக்கவில்லை, என கேள்வி எழுப்புகிறார்கள் Joannaவின் பெற்றோர்.
பொலிசார் அப்போதே Michelஐப் பிடித்திருந்தால், Joannaவும் மற்ற பிள்ளைகளும் தப்பியிருப்பார்கள் என்கிறார்கள் அவர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |