விமானத்தில் அத்துமீறிய பிரித்தானிய தம்பதியினர்: நீதிமன்றம் வழங்கிய மிகப்பெரிய அபராதம்!
விமானத்தில் மோசமான செயலில் ஈடுபட்ட பிரித்தானிய தம்பதியினர் சமீபத்தில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டனர்.
விமானத்தில் அத்துமீறிய தம்பதி
கடந்த மார்ச் மாதம் EasyJet விமானத்தில் பயணம் மேற்கொண்ட பிரித்தானிய தம்பதி தங்களது மோசமான நடத்தை காரணமாக நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டனர்.
அதிக பயணிகள் பயணம் செய்த விமானத்தில் அத்துமீறிய பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட பிராட்லி ஸ்மித்(Bradley Smith, 22) மற்றும் அன்டோனியா சல்லிவன்(Antonia Sullivan, 20) ஆகிய இருவர் மீது வழக்கு பதியப்பட்டது.
மார்ச் 3ம் திகதி ஸ்பெயினின் டெனெரிஃப் பகுதியில் விடுமுறையை கழித்து விட்டு பிரிஸ்டல் திரும்பிய விமானத்தில் 16A மற்றும் 16B இருக்கைகளில் அமர்ந்து இருந்த தம்பதி முறையற்ற செயலில் ஈடுபட்டதாக பல்வேறு சாட்சிகள் விமான குழுவிடம் குற்றம் சாட்டிய பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
The Sun செய்தி அறிக்கையின் படி, தாய் மற்றும் மகள் உள்பட 3 சாட்சிகள் பிரித்தானிய தம்பதியின் அத்துமீறிய செயலுக்கு நேரடி சாட்சியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வழங்கப்பட்ட தண்டனை
பயணிகள் முன்னிலையில் அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட தம்பதிகளுக்கு நீதிமன்ற விசாரணையின் இறுதியில், பாதிக்கப்பட்ட 3 சாட்சிகளுக்கும் தலா 100 பவுண்டுகள் (தோராயமாக ரூ.11,000) இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் கூடுதலாக பிராட்லி ஸ்மித்-திற்கு 300 மணி நேர சமூக சேவையும், அன்டோனியா சல்லிவனுக்கு 270 மணி நேர சமூக சேவை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |