100 பெண் பிணங்களுடன் உறவு கொண்ட 'மிருகம்'! வெளிவந்த அதிர்ச்சி தகவல்
பிரித்தானியாவில் இரட்டைக் கொலை வழக்கில் கைதான மருத்துவமனை எலக்ட்ரீசியன், பிணவறையில் 100-க்கும் மேற்பட்ட சடலங்களுடன் உடலுறவில் ஈடுபட்டது தெறிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1987-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கென்ட் கவுன்டியில் உள்ள Tunbridge Wells நகரத்தில், வென்டி நெல், 25 (Wendy Knell) மற்றும் கரோலின் பியர்ஸ், 20 (Caroline Pierce) எனும் இரண்டு இளம் பெண்கள் 5 மாத இடைவெளியில் அடுத்தடுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவர்கள் வசித்துவந்த இடத்திலிருந்து ஒரு மைல் தூரத்தில் ஆடைகளின்றி பிணமாக கண்டெடுக்கப்பட்டனர்.
இருவரும் கொலை செய்யப்பட்ட பிறகு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருந்தது உடற்கூராய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
Photo: Kent Police
பிரித்தானியாவில் 'Bedsit Murder' என்று பிரபலமாக அறியப்படும் இந்த கொலை வழக்கில், 34 ஆண்டுகள் கழித்து, கடந்த டிசம்பர் மாதம் கிழக்கு சசெக்ஸின் ஹீத்ஃபீல்டில் இருந்து டேவிட் ஃபுல்லர் (David Fuller) எனும் 67 வயது நபர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார்.
விசாரணைக்கு பிறகு அவர் மீதான குற்றங்கள் நிருபிக்கப்பட்ட நிலையில், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கு கடந்த மாதம் நீதிமன்ற விசாரணைக்கு வந்த நிலையில், டேவிட் ஃபுல்லர் வேலை பார்த்த கென்ட் மற்றும் சசெக்ஸ் மருத்துவமனை மற்றும் டன்பிரிட்ஜ் வெல்ஸ் மருத்துவமனை பிணவறைகளில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சடலங்களுடன் உடலுறவு கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
Photo: Kent Police
அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை மேலும் நீட்டிக்கப்பட்டது. பொலிஸார் அவரது முகவரியில் சோதனை நடத்தியபோது, அவரது வீட்டில் கவனமாக மறைத்து சேமித்து வைக்கப்பட்டிருந்த பல ஹார்டு டிரைவ்கள் மற்றும் புகைப்படங்கள் கிடைத்தன.
அதனை முழுவதுமாக ஆய்வு செய்ததில், தற்போது மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர், வேலை செய்துவந்த மருத்துவமனை பிணவறைகளில் 101 பெண் பிணங்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதில், 9 வயது சிறுமியின் சடலத்திலிருந்து 100 வயது மூதாட்டியின் சடலம் வரை இதில் அடங்கும்.
Upcoming Images Credit: Kent Police

