பிரித்தானியாவில் பரவும் அரிதான ஸ்கேபிஸ் நோய்- மருத்துவர்கள் எச்சரிக்கை
பிரித்தானியாவில் அரிதான மற்றும் மிகவும் தொற்றக்கூடிய நோயான Crusted Scabies (Norwegian Scabies) பரவிவருகிறது.
இதனால் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள Glangwili வைத்தியசாலையின் Steffan Ward தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சாதாரண Scabies நோயில் கடுமையான அரிப்பு மற்றும் சிரங்கு ஏற்படும். ஆனால் Crusted Scabies நோயாளிகளில் இவை தெளிவாக தெரியாது. இருப்பினும், இவர்களின் உடலில் இரண்டு மில்லியன் வரை mites மற்றும் முட்டைகள் இருக்கக்கூடும். இதனால் நோய் மிக வேகமாக பரவக்கூடியதாக இருக்கும்.

மருத்துவ அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த நோயாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்துள்ளனர். அறிகுறிகள் தெரியாதவர்களுக்கும் முன்னெச்சரிக்கை சிகிச்சை வழங்கப்படுகிறது.
இந்த நோய் முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், HIV/AIDS நோயாளிகள், நரம்பியல் பிரச்சினைகள் உள்ளவர்கள் ஆகியோருக்கு அதிக ஆபத்தானது.
Crusted Scabies சரியான நேரத்தில் கண்டறியப்படாவிட்டால், secondary bacterial infections மற்றும் sepsis போன்ற உயிருக்கு ஆபத்தான சிக்கல்கள் ஏற்படலாம்.
தடுப்பு நடவடிக்கைகளாக, பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், உடைகள் மற்றும் படுக்கைச் சீலைகளை சுத்தம் செய்தல், மருத்துவமனைகளில் கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மருத்துவ நிபுணர்கள், இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல் மிக முக்கியம் என எச்சரித்துள்ளனர். சரியான சிகிச்சை அளிக்கப்பட்டால் பரவலை கட்டுப்படுத்த முடியும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |