நவம்பர் 29-ஐ முன்னிட்டு பிரித்தானிய சைபர் பாதுகாப்பு முகமை விடுத்துள்ள எச்சரிக்கை
நவம்பர் 29-ஆம் திகதி Black Friday-வை முன்னிட்டு பிரித்தானிய சைபர் பாதுகாப்பு முகமை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
Black Friday-க்கு முந்தைய ஓன்லைன் ஷாப்பிங் பருவத்தில் மோசடிகள் அதிகரிக்கலாம் என பிரித்தானியாவின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (NCSC) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் மட்டும் ஓன்லைன் மோசடிகளால் £11.5 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக Action Fraud அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய பாதுகாப்பு ஆலோசனைகள்
- முக்கிய கணக்குகளில் இரட்டை அடையாளப் பாதுகாப்பை (Two-step verification) அமைக்க வேண்டும்.
- கடைசியாக ஒருமுறை சிந்திக்கவிடாமல் உடனடி முடிவெடுக்க வற்புறுத்தும் தந்திரங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- உண்மைத்தன்மை இல்லாத அல்லது சந்தேகமான ஓன்லைன் இணைப்புகளைத் தவிர்க்கவும்.
NCSC தலைமை அதிகாரி ரிச்சர்ட் ஹார்ன் கூறுகையில், “பண்டிகை பருவம் பரபரப்பாக இருக்கும், இதனை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்துகின்றனர். அதனால், பாதுகாப்பான கடவுச்சொற்களையும் இரண்டு நிலை உறுதிப்படுத்தலையும் பயன்படுத்துவது அவசியம்” என்றார்.
மோசடிகளை தடுக்கும் அரசின் முயற்சிகள்
மோசடிகளுக்கு எதிராக அரசாங்கம் Stop! Think Fraud! என்ற புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
இதன் மூலம் ஆன்லைன் பாதுகாப்புக்கான நடைமுறை வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.
மோசடிகள் சந்தேகத்திற்குரியவை என தோன்றினால், உடனே விலகி, சந்தேகமான இணைப்புகளை அழுத்த வேண்டாம் என்று பரிந்துரை செய்யப்படுகிறது.
சமூக ஊடகங்களில் மோசடிகள் அதிகரிப்பு
Action Fraud வழங்கிய தகவலின்படி, 43% ஓன்லைன் மோசடிகள் சமூக ஊடக தளங்களில் ஏற்படுகின்றன. விற்பனைக் கூடங்கள் மற்றும் வணிக தளங்கள் தொடர்ந்து மோசடிகளுக்கு ஈடாகியுள்ளன.
ஓன்லைன் பொருட்களை வாங்கும் போது ஆரோக்கியமான முறையில் பணத்தை பரிமாறி பாதுகாப்பாக இருப்பது மிகவும் முக்கியமானது என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK Black friday sale, UK cyber attack, UK cyber security agency, November 29 UK Black friday sale