மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு பிரித்தானிய ராஜ குடும்பம் சார்பில் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இன்று மேக்ரானும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் சந்திக்கும் நிலையில், பிரான்சுடன் கைகோர்த்து அணு ஆயுத தாக்குதல் நடத்துவது தொடர்பில் பிரித்தானியா ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளது.
பிரித்தானியா பிரான்ஸ் அணு ஆயுத ஒப்பந்தம்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த விடயம் உலக நாடுகள் பலவற்றை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அத்துடன், அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்றதும் அவரும் அவரது துணை ஜனாதிபதியான JD வேன்ஸும் ஐரோப்பாவை மட்டமாக விமர்சிக்க, போர் என்று ஒன்று வந்தால் நேட்டோ நாடு என்னும் வகையில் அமெரிக்கா உதவி செய்யாது என்ற எண்ணம் ஐரோப்பிய நாடுகளுக்கு உருவாகியுள்ளது.
ஆகவே, ஐரோப்பிய நாடுகள் தங்கள் ராணுவ பலத்தை அதிகரிக்கும் முயற்சிகளை அதிகப்படுத்திவருவதுடன், சக நாடுகளுடனான உறவை வலுப்படுத்தவும் துவங்கியுள்ளன.
குறிப்பாக ஆயுத பலம் கொண்ட நாடுகளுடன் நல்லுறவு வைத்துக்கொள்வது, மூன்றாம் உலகப்போர் வெடித்தால் உதவியாக இருக்கும் என ஐரோப்பிய நாடுகள் எண்ணத் துவங்கியுள்ளன.
பிரித்தானியாவைப் பொருத்தவரை, மன்னராட்சி நடைபெறும் அந்நாட்டில், மற்ற நாடுகளின் தலைவர்களை வரவேற்று உபசரிப்பதன் மூலம் நல்லுறவை ஏற்படுத்துக்கொள்ள மன்னர் சார்லஸ் தலைமையிலான ராஜ குடும்பம் முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது.
அதே நேரத்தில், ஆட்சி செய்யும் பிரதமரும் தன் பங்குக்கு சக நாடுகளுடனான உறவை வலுப்படுத்திக்கொள்ள, அதிகாரப்பூர்வமாக அரசின் சார்பில் நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.
அவ்வகையில், பிரான்சும் பிரித்தானியாவும், அணு ஆயுத தாக்குதல் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளன.
அதாவது, மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் நிலையில், பிரித்தானியாவையோ அல்லது பிரான்சையோ எதிரி நாடுகள் தாக்கினால், பிரான்சும் பிரித்தானியாவும் ஒன்றிணைந்து எதிரியைத் தாக்கும் வகையில் இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துகொள்ள இருக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |